மேலும் அறிய

ட்ராபிக் சிக்னலில் வாழ்க்கை சிக்கலை பேசும் ட்ராபிக் எஸ்.ஐக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு வாழ்த்து...!

டி.ஜி.பி சைலேந்திரபாபு சார் எனக்கு போன் செய்து பாராட்டினார். மதுரை வரும்போது நேரில் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்"

டென்சன் நிறைந்த டிராபிக் சிக்னலில் தலையில் மசாஜ் செய்வது போல் உணர்வை கொடுக்கும் வாஞ்சையான குரல் வண்டியூர் சிக்னலில் கேட்டது. வண்டியை நிறுத்தி  பேசுவதை கேட்டோம். ’தம்பிகளா பாத்து சூதானமா போங்க, வண்டிய முறிக்கி முறிக்கி எல்லாம் ஓட்டாதீக’- என இளைஞர்களுக்கு அக்கரையுடன் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். மதுரை மாநகர போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர்தான் பழனியாண்டி. சிவகங்கை திருப்புவனம் பகுதியை சேர்ந்த இவர் காவல்துறை பணியில் 29 வருடங்களாக பணியாற்றி வருகிறார். தற்போது 2 வருடமாக மதுரை மாநகர போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் மிகுந்த கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். இவரது வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது.

ட்ராபிக் சிக்னலில் வாழ்க்கை சிக்கலை பேசும் ட்ராபிக் எஸ்.ஐக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு வாழ்த்து...!
 
மதுரை மக்களின் பாராட்டைப் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டியிடம் பேசினோம்...," 29 வருடம் காவல் பணியை விரும்பி செய்கிறேன். நம்முடைய கடமையை மட்டும் செய்யாமல் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நல்ல  கருத்துகளை தெரிவித்து வருகிறேன். எனக்கு புத்தக வாசிப்பு என்பது சிறுவயதில் இருந்தே பிடிக்கும். அதனால் புத்தகத்தில் படிக்கும் விசயத்தை பொதுமக்கள் மத்தியில் பேசுகிறேன். டிராபிக் போலீசாக இருப்பதால் மைக்கில் பேச வாய்ப்பு கிடைக்கிறது. சிக்கினலில் கிடைக்கும் மைக்கை கருவியாக பயன்படுத்திக் கொள்கிறேன்.

ட்ராபிக் சிக்னலில் வாழ்க்கை சிக்கலை பேசும் ட்ராபிக் எஸ்.ஐக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு வாழ்த்து...!
 
'குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும், ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சி போனாத்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும். எல்லாரும் சந்தோஷமா ஆனந்தமா இருக்கணும்... எதுக்காகவும் கவலைப்படக்கூடாது..' என்று போக்குவரத்து விழிப்புணர்வுடன் வாழ்வியல் அனுபவங்களையும் ஒலிபெருக்கியில் பேசுகிறேன்.
 
'அசதியா உழைச்சா தான் வசதியா வாழமுடியும். கடிகாராம் நேரம் தான் காட்டும் அத நல்ல நேரமாவும், கெட்ட நேரமாவும் மாத்துறது நம்ம கையில தான் இருக்கும். சாலை என்றால் மேடு பள்ளம் இருக்கும், டிராபிக் என்றால் சிக்னல் இருக்கும், வீடு என்றால் சண்டை சச்சரவு இருக்கும் அதை கடந்து பாசமாக இருக்க வேண்டும்' - என்று அடுக்கு மொழியிலும் பேசுவேன்.
 
இது குடும்ப பெண்களுக்கு பிடிக்கும். பைக்கிள் இருந்தபடி கையெடுத்தெல்லாம் கும்பிட்டு செல்வார்கள். இது போன்ற விசயங்கள் என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. இந்நிலையில் என்னுடை வீடியோ வைரலாக பரவவும் வெளிநாடுகளில் இருந்து போன் செய்து பேசுகிறார்கள்.  டி.ஜி.பி சைலேந்திரபாபு சார் எனக்கு போன் செய்து பாராட்டினார். மதுரை வரும்போது நேரில் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்" என மகிழ்ச்சியுற்றார்.

ட்ராபிக் சிக்னலில் வாழ்க்கை சிக்கலை பேசும் ட்ராபிக் எஸ்.ஐக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு வாழ்த்து...!
மேலும் மதுரை மாவட்ட செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
நம்முடன் பேசிக் கொண்டிருக்கும்போதே போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார். மக்களை அறிவுறுத்தி, வாழ்வியல் பாடங்களை எடுக்கத் தொடங்குகிறார். காவலருக்குள்ளும் கசிந்துருகும் கனிவும், கண்ணியமும் நம்மை வியக்க வைக்கின்றன. ஒலிபெருக்கியில் என்ன சொல்கிறாரோ, அதையே நமக்கும் அறிவுரையாய் சொல்லி வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று நமக்கும் விடை கொடுக்கிறார்.

தலைப்பு செய்திகள்

தமிழின் வேர் தேடி... தேவகோட்டை கல்லூரியில் தொல்லியல் பயிலரங்கம்!
தமிழின் வேர் தேடி... தேவகோட்டை கல்லூரியில் தொல்லியல் பயிலரங்கம்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்!
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
மதுரை ரயில்வே: 110 கி.மீ வேக ரயில்கள்; பாதசாரிகள், கால்நடைகளுக்கு அவசர எச்சரிக்கை!
மதுரை ரயில்வே: 110 கி.மீ வேக ரயில்கள்; பாதசாரிகள், கால்நடைகளுக்கு அவசர எச்சரிக்கை!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Embed widget