மேலும் அறிய

Madhya Pradesh: ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை.! தப்பிய பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்..!

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்க முயன்ற இளைஞர் அந்த பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி கீழே வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் அந்த மாநிலத்தின் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள சதார்பூர் மாவட்டத்தில் உள்ள பகேஷ்வர்தாம் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு சென்றுவிட்டு கடந்த 27-ந் தேதி இரவு ரயில் மூலமாக தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவருடன் ஏராளமான பயணிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். ரயில் மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராகோ மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள மகோபா ரயில் நிலையங்களுக்கு இடையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அவருடன் ரயிலில் வந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

Madhya Pradesh: ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை.! தப்பிய பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்..!

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது, அந்த இளைஞர் அந்த இளம்பெண்ணை ஓடும் ரயில் என்றும் பாராமல் ரயிலில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், அவர் மீட்கப்பட்டு சதார்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கஜூராகோ காவல்நிலையத்தில் எந்தவொரு எப்.ஐ.ஆரும் முதலில் பதிவு செய்யவில்லை. பின்னர், ரேவா ஜி.ஆர்.பி. காவல்நிலையத்திற்கு புகார் மாற்றப்பட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. மேலும், போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிய அந்த இளைஞரையும் போலீசார் கைது செய்தனர்.

Madhya Pradesh: ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை.! தப்பிய பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்..!

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியதாவது, சதார்பூரில் உள்ள பகேஷ்வர்தாம் கோவிலுக்கு நான் சென்று வந்தேன். அப்போது, சக பயணி ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை அளித்தார். நான் அவரிடம் என்னை விட்டு தூரமாக போ என்று எச்சரித்தேன். அதையும் மீறி என்னை நெருங்க நினைத்த அவனது கையை கடித்துவிட்டேன். பின்னர், அந்த இளைஞன் என்னை ரயிலில் இருந்து தூக்கி எறிந்துவிட்டான் என்று கூறியுள்ளார்.

அந்த இளம்பெண் கடந்த 9 மாதங்களாக பகேஷ்வர்தம் ஆலயத்திற்கு தொடர்ந்து சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது மட்டுமின்றி அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Top 10 News Headlines: தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை மேலும் குறைவு, பீகாரில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், ஜோ ரூட் அசத்தல் சாதனை - 11 மணி செய்திகள்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Embed widget