Video : ”இச்சுத்தா இச்சுத்தா..கன்னத்துல இச்சுதா!”: பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் குரங்கின் சேட்டை
உங்களுக்கு வேலையில் மந்தமான நாளாக இருந்தால், இந்த புதிய வீடியோ உங்கள் மனநிலையை உடனடியாக மாற்றச் செய்யும்.
ஜீன்ஸ் அணிந்த சிம்பன்சி பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பன்சிகள் அபிமானமான விலங்குகள் . பொழுதுபோக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க மிகவும் அன்பான விலங்குகள் அவை. மனிதர்களைப் போலவே அவை உணர்ச்சிகளைப் பகிர்கின்றன. இந்த சமீபத்திய வைரல் வீடியோ அதற்கு சான்றாகும். உங்களுக்கு வேலையில் மந்தமான நாளாக இருந்தால், இந்த புதிய வீடியோ உங்கள் மனநிலையை உடனடியாக மாற்றச் செய்யும்.
View this post on Instagram
இது தவிர சுட்டி யானைக்குட்டி உடனான வீடியோ ஒன்றையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
View this post on Instagram
சௌமியா சந்திரசேகரன் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் சமீபத்தில் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்டுக்குச் சென்று சிம்பன்சியுடன் போட்டோஷூட் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 20க்கும் மேற்பட்ட கருத்துகளுடன் 5.3 மில்லியனுக்கும் அதிகமான வியூவ்ஸ்களையும் 255,288 லைக்குகளையும் அந்த காட்சிகள் இதுவரை பெற்றுள்ளன.
வைரலான வீடியோவில், சௌமியா ஊஞ்சலில் அமர்ந்திருப்பதையும், சிம்பன்சி ஜீன்ஸ் அணிந்திருப்பதையும் காணலாம். சிம்பன்ஸி சௌமியாவுடன் தோளில் கைகளை வைத்துக்கொண்டு அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுப்பதைக் காணலாம். அதுமட்டுமின்றி, சிம்பன்சி, ஒரு காதலனைப் போல சௌமியாவின் கையில் முத்தம் கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.