“நானே டாக்டர்...” யூடியூப்தான் ஆசிரியர்: வயிற்றை கிழித்த இளைஞருக்கு அடுத்து நடந்தது என்ன?
யூடியூப் பார்த்து தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்து வயிற்றை ஏழு அங்குலம் அளவிற்கு கிழித்து இளைஞர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் தானே டாக்டராக மாறி யூடியூப் பார்த்து தனது வயிற்று வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் யூடியூப் பார்த்து தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்து வயிற்றை ஏழு அங்குலம் அளவிற்கு கிழித்து இளைஞர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலம் மதுரா சுன்ராக் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாபு குமார் (32). திருமண மண்டபம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இன்டர்நெட் யூடியூப் வீடியோக்கள் மீது மோகம் கொண்ட ராஜபாபு குமார், அதிக நேரம் யூடியூப் பார்ப்பதிலேயே பொழுதை கழிப்பார் என கூறப்படுகிறது. ராஜபாபு குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏற்கனவே மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்நிலையில் நாட்களாக அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது என தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று முறையாக சிகிச்சை எடுப்பதற்கு பதிலாக மிக விபரீதமான ஒரு யோசனை ராஜபாபு குமாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வயிற்று வலிக்கு என்ன சிகிச்சை மேற்கொள்வது என்பதை யூடியூபில் தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். இதற்குத் தேவையான அறுவை சிகிச்சை கருவிகளை வாங்கி வந்து வீட்டில் சேகரித்துள்ளார். தன்னைத்தானே டாக்டராக நினைத்துக் கொண்டு தனது வயிற்று வலி பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை தான் சரியான முடிவு என தீர்மானம் செய்த ராஜபாபு குமார் கடந்த 19ஆம் தேதி தனது அரைக்கும் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார்.
பின்னர் வயிற்று பகுதி மரத்துப் போவதற்கான ஊசியை தனக்கு செலுத்திக்கொண்ட ராஜபாபு குமார் அடுத்ததாக எடுத்த முடிவு விபரீதத்தை ஏற்படுத்தியது. தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினார். இதற்காக அடிவயிற்றில் ஏழு அங்குலம் அளவுக்கு இக்களித்து எதனால் வலி ஏற்படுகிறது என ஆராய்ந்து உள்ளார். ஆனால் ஆபரேஷன் கத்தி ஆழமாக பாய்ந்ததால் ரத்தம் அதிகம் வெளியேற தொடங்கியுள்ளது.
உடனே யூடியுப் வீடியோ பார்க்க அனுபவத்தில் அவசர அவசரமாக வயிற்றில் தையல் போட்டுள்ளார் ராஜபாபு குமார். தவறாக செயல்பட்டதால் ரத்தம் நிற்காமல் வெளியேறி வலி அதிகரித்துள்ளது. எனக்கு இதனால் ஏதோ போகிறது என்பதை உணர்ந்ததும் அறையில் இருந்து அலறியபடி ஓடி வந்து வீட்டில் இருந்தவுடன் நடந்த உண்மையை தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே ராஜபாபுவை பரிசையும் சேர்த்த தலைமை டாக்டர் சஷி ரஞ்சன், ஏழு அம்பலத்திற்கு போனால் 12 தையல்கள் போடப்பட்டிருப்பதை பார்த்து அதை பிரித்துவிட்டு வேறு தையல் போட்டு ரத்தம் வெளியேறுவதை நிறுத்தி சிகிச்சை மேற்கொண்டார்.
இத்தனை நடந்தும் சுய உணர்வுடனே ராஜபாபு இருந்ததுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. இருப்பினும் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் நிகழ்ச்சிக்காக ஆக்ராவில் அனைத்து வசதிகளில் நடந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்களை அறிவுறுத்தினர். இதன்படி ஆதார் கொண்டு செல்லப்பட்ட ராஜபாபுவுக்கு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியதால் இந்த சம்பவம் வெளியாகி உள்ளது. இப்படி விபரீதமான முடிவு எடுத்து உயிருக்கே உலை வைத்துக் கொள்பவர்களை என்னவென்று சொல்வது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

