Morning Headlines: அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழை: முக்கியச் செய்திகள்..
Morning Headlines May 17: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தலைப்புச் செய்திகளின் தொகுப்பாக காணலாம். முக்கியமான 5 செய்திகளின் லிங்க்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஓரிரு தினங்களாக தென் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும் ஓரிரு தினங்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் இன்றும் மழை பரவலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பரவலாக பெய்யும் என்று அறிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், மேலும் படிக்க..
- இந்து, முஸ்லிம் அரசியல் செய்ய மாட்டேன் என சொல்லும் பிரதமர் மோடி.. உண்மை என்ன?
இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்துகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், தான் முஸ்லீம்களை குறிப்பிட்டு பேசவில்லை என்றும் சட்டவிரோத குடியேறிகள் பற்றி மட்டுமே பேசியதாக பிரதமர் விளக்கம் அளித்தார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த நேர்காணலில், "முஸ்லீம்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தைப் பற்றியும்தான் பேசினேன்" என்றார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அதிக குழந்தைகளை உடையவர்களை பற்றி ஒருவர் பேசும் போதெல்லாம், அவர்கள் முஸ்லீம்களை பற்றி பேசுகிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது? முஸ்லீம்களுக்கு ஏன் இவ்வளவு அநியாயம் செய்கிறீர்கள்? மேலும் படிக்க..
- கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவா? பரவும் செய்தி என்ன? பாரத் பயோடக் தெரிவித்தது என்ன?
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக குழுவினர் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களிடம் ஆய்வு செய்தது. அதன் முடிவுகளில் சுவாச குழாய்களில் தொற்று ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தியை சமீபமாக, வைரலாகி வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான ஆய்வுமுறை குறித்தும், பாரத் பயோடெக் தெரிவித்தது குறித்தும் தெரிந்து கொள்வோம். கொரோனா தொற்று உலக முழுவதும் பரவி வந்த நிலையில், தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியானது பெரும் பங்கு வகித்ததாக பல மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க..
- லாரியில் தூக்கி செல்லப்பட்டதா வாக்குப்பதிவு இயந்திரங்கள்? வைரலாகும் வீடியோ உண்மையானதா?
"வாக்கு இயந்திரத்தை பாணி பூரி மாதிரி தூக்கிட்டு போரானுக வடக்கன்ஸ்ஸ். இப்படி தேர்தல் நடத்தினால் பிஜேபி 400 இல்ல, 4000 சீட் கூட ஜெய்க்கும்" என்ற கேப்ஷனுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சிலர் லாரியில் தூக்கிச் செல்வது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். மேலும் படிக்க..
- ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
தமிழ்நாட்டுக்கு ”காவிரியில் இருந்து 2 TMC நீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி கர்நாடக ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்னை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் படிக்க..