Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
தமிழ்நாட்டுக்கு ”காவிரியில் இருந்து 2 TMC நீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி கர்நாடக ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு ”காவிரியில் இருந்து 2 TMC நீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி கர்நாடக ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஒழுங்காற்று குழு கூட்டம்:
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்னை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டும், மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் , தமிழ்நாடு , கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, மே மாதம் 6. 2 டி.எம்.சி பாக்கி நீரையும், ஜூனில் தரவேண்டிய 9.17 டி.எம்.சி நீரையும் திறக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, அணைகளில் போதிய அளவு நீர் இல்லாததால் நீர் திறக்க முடியாது என தெரிவித்தது.
இதையடுத்து, 2.5 டி.எம்.சி நீரை திறக்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.
குறைந்த நீர்வரத்து:
கடந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அணைகள் முழுவதுமாக நிரம்பாததால், தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் குறைவாகவே திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் முற்றிலுமாக தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்படுகின்ற தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு வந்ததால், கடந்த நான்கு மாதங்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து, வினாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து முற்றிலுமாக இல்லாமல், காவிரி ஆறு வறண்ட பாறைகளாக காட்சியளித்து வந்தது. மேலும் ஒகேனக்கல் ஐந்தருவிகளில் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடக மாநில குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்பொழுது திடீரென வினாடிக்கு எட்டாயிரம் கன அடி வரை நீர்வரத்து உயர்ந்தது. ஆனால் குடிநீர் தேவை முடிந்த பின் காவிரியில் நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு ”காவிரியில் இருந்து 2 TMC நீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி கர்நாடக ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், வரும் 21 ஆம் தேதி காவிரி மேலாண்மை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.