Morning Headlines: இந்தியாவில் இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ...!
Morning Headlines August 4: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.
- Gukesh Chess: இந்தியாவில் நம்பர் 1 செஸ் வீரர்.. சென்னையை சேர்ந்த குகேஷ் புதிய சாதனை..! முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் விஸ்வ்நாதன் ஆனந்தைப் பின்னுக்குத் தள்ளி 9 வது இடம் பிடித்து தமிழ்நாடு வீரர் குகேஷ் சாதனை படைத்துள்ளார். செஸ் உலகக்கோப்பை 2023 தொடர் அஸர்பைஜான் நாட்டின் பாகுவில் நடைபெற்று வருகிறது. ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய இத்தொடர் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 செஸ் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இத்தொடரில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேண்டிடேட்ஸ் டோர்னமெண்ட்டில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். மேலும் படிக்க
- ED Raid: அமைதியா இருங்க; இல்லனா வீட்ல ED ரெய்டு விட்டிருவேன்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை மிரட்டிய மத்திய அமைச்சர்
மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது அமலாக்கத்துறை இயக்குநரகம். பணமோசடி, அந்நியச் செலாவணி மீறல்கள் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அமைப்பின் மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் படிக்க
- Parliament: மத்திய அரசுடனான மோதல் முடிவுக்கு வருகிறதா? மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்குகிறதா எதிர்க்கட்சிகள்? நடந்தது என்ன?
மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் மணிப்பூர் பக்கம் திரும்பியுள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முடங்கி போனது. நாடாளுமன்ற விதி 267-இன் கீழ் மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. அதேபோல, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும் படிக்க
- Gyanvapi Masjid: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி..
ஞானவாபி மசூதி வழக்கில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் வாரணாசி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் படிக்க
-
Modi Tweet: ஆப்பம், பணியாரம், புளியோதரை சூப்பர்... கூட்டணி எம்.பிக்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்த பிரதமர் மோடி!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கூட்டணி கணக்கு, வியூகங்களை வகுப்பது, எதிர்க்கட்சி கூட்டணியை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.பிக்கள் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க