Top 10 News Headlines: ரூ.67,000 நெருங்கும் தங்கம், 1000 பேர் உயிரிழப்பு, சிலிண்டர் தட்டுப்பாடு? - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today Mar 29: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டம்
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. 1,170 இடங்களில் 100 நாள் வேலைக்குச் செல்வோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. "காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவரது பெயரில் உள்ள இந்த திட்டத்தையும் பிடிக்கவில்லை" என முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்
புதிய உச்சத்தில் தங்கம்
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 66 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 360 ரூபாயை எட்டியுள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 113 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3வது நாளாக LPG கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்
தென் மாநிலம் முழுவதும் 3வது நாளாக LPG கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக். சுமார் 4,000-க்கும் மேற்பட்ட LPG கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தம். இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம். எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுபாடுகளை தளர்த்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம்.
தொகுதி மறுசீரமைப்பு - சந்திரபாபு நாயுடு கருத்து
சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதும் நமக்கு ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மாறாக வட மாநிலங்களுக்கு இது சாதகமாக உள்ளது. எனவே தென்னிந்திய மாநிலங்கள் மக்கள்தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வட மாநிலங்களை சேர்ந்த அதிகமானோர் இங்கு (தென் மாநிலங்களுக்கு) வர நேரிடும்” என பேசியுள்ளார்.
ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..
ATM-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது RBI. மே 1 முதல் அமல். 5 முறைக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் பிடிக்கப்படும்
பயணிகள் கவனத்திற்கு
"கவுன்டரில் வாங்கிய ரயில் பயணச் சீட்டுகளை IRCTC இணையதளம் வாயிலாகவோ அல்லது 139 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் ரத்து செய்யலாம். எனினும், டிக்கெட் கட்டணத்தைத் திரும்பப் பெற, பயணிகள் முன்பதிவு மையத்துக்குச் செல்ல வேண்டும்" மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்
மியான்மரில் ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு
மியான்மரில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மியான்மருக்கு மருத்துவ உதவிகளை செய்துள்ளன.
பிரதமர் மோடியை சிறந்த நண்பர் - அதிபர் ட்ரம்ப்
பிரதமர் மோடியை சிறந்த நண்பர் என்றும், புத்திசாலி என்றும் புகழ்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து! "உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இது மோசமானது. அதே வேளையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பான முறையில் தொடர்கிறது" எனவும் தெரிவித்துள்ளார். இக்கருத்து இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் கருத்து
மும்பை - குஜராத் இன்று மோதல்
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் தங்களது முதல் லீக் போட்டியில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
சேப்பாக்கத்தில் சென்னையின் மிகப்பெரிய தோல்வி
ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய (MARGIN) தோல்வியாகும். 2019ல் மும்பைக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்றிருந்தது. நேற்றைய தோல்வியால் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.