Breaking News LIVE : கரையைக் கடந்தது குலாப் புயல்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE

Background
ஒரேநாளில் 24.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற 3ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நிறைவு பெற்றது. இந்த முகாமில் ஒரேநாளில் 24,85,814 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை கடந்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆந்திரா, ஒடிசா இடையே கரையைக் கடந்தது குலாப் புயல்
வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்தது குலாப் புயல்
ஒருநாள் கொரோனா பாதிப்பு 1700க்கு கீழ் குறைந்தது
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1724இல் இருந்து 1,694ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக 1700 ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு, இன்று 1700க்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 190 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,490 ஆக உயர்ந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் 79,433 வேட்பாளர்கள் போட்டி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79,433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். 2,981 பதவியிடங்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 14, 571 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
தடுப்பூசி போட கட்டாயப்படுத்தினால் தவறில்லை
தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் அது தவறில்லை. மக்கள் நோயின்றி வாழ தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

