Taj Mahal Case: தாஜ்மஹாலின் 22 அறைகள்.. புகைப்படங்களை வெளியிட்ட தொல்லியல் துறை..
தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளில் சிலவற்றின் புகைப்படங்களை இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.
தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளில் இந்து தெய்வங்கள் இருப்பதாகவும், அதைத் திறக்க உத்தரவிட வேண்டும் என பாஜக நிர்வாகி ரஜ்னீஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கை, அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டித்து தள்ளுபடி செய்த நிலையில், 22 அறைகளில் சிலவற்றின் புகைப்படங்களை இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.
வழக்கு- விசாரணை:
தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்கக் கோரிய வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிபதிகள் டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு:
மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதில் தாஜ்மஹாலில் உள்ள 22 பூட்டிய அறைகளைத் திறக்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார். மேலும், அந்த அறைகளில் இருப்பது குறித்து நாட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என் ரஜ்னீஷ் சிங் தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அறைகளைப் பூட்டி உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் தெரிவித்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் தரப்பு:
மனுதாரர் தரப்புக்கு பதிலளித்து பேசிய நீதிபதிகள் தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினாரா என்று சந்தேகிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும் எந்த அடிப்படையில் நீதிமன்றத்தை அணுகி உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். நீதிபதிகளின் அறைகளைத் திறக்கக்கோரி வழக்கு தொடுத்தாலும் தொடுப்பீர்கள் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய விரும்பினால், எம்.ஏ. போன்ற ஆய்வு படிப்புகளை படித்துவிட்டு, பின் ஆய்வு செய்ய வாருங்கள். அப்போது அனுமதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள் என நீதிபதி காட்டமாக பதிலளித்தார். இது போன்ற வழக்கு தொடுப்பதன் மூலம், பொது நல வழக்குத் தொடரும் முறையை இழிவுபடுத்த வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த சூழலில், 22 அறைகளில் சிலவற்றின் புகைப்படங்களை இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Click on the link to download/view the January issue of @ASIGoI's Newsletter.https://t.co/tIJmE46UR4 pic.twitter.com/UKWsTA2nPZ
— Archaeological Survey of India (@ASIGoI) May 9, 2022
வெளியிடப்பட்ட அறைகளின் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் ஹிட் அடிக்கிறது.