மேலும் அறிய
வடமாநில அமைச்சர்கள் இப்படி தான் செய்வார்கள்.. உண்மையை உடைத்த திருமாவளவன்
வட மாநிலத்தில் இருந்து வரும் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை, நாம் பேசினாலும் புரிந்து கொள்வதில்லை அப்படித்தான் பெரும்பாலான அமைச்சர்கள் உள்ளனர் - மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி.

தொல்.திருமாவளவன்
Source : whats app
ஜாதி ரீதியான மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு புலனாய்வு ரீதியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் ஸ்ரீவைகுண்டத்தில் அண்மையில் பேருந்தில் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவனை நேரில் சந்திப்பதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்,
தி.மு.கவை ஆட்சியிலிருந்து விரட்ட யாருடனும் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி கூறியது தொடர்பான கேள்விக்கு:
அது அவருடைய விருப்பம் அவர் யாருடனும் கூட்டணி வைக்கலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆகவே திமுக கூட்டணிக்கு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு வழக்கம்போல கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
விடுதலை சிறுத்தை ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ஏன் கோரவில்லை என்ற செய்தியாளர் கேள்விக்கு:
சொல்லக்கூடாது என்று இல்லை, ஆட்சியில் பங்கு என்று சொல்லக்கூடிய நேரத்தில் சூழலை பொறுத்து கோரிக்கை வைப்போம். எங்களைப் பொறுத்தவரை கட்சி நலனையும் நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு தான் முடிவெடுத்தோம், இனிமேலும் முடிவெடுப்போம். எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும் அந்த காலத்தை கணித்தெல்லாம் சொல்ல முடியாது மாநில கட்சியாக அங்கீகரித்து இருக்கிறார்கள் ஒரு அதிகார வலிமையான கட்சியாகவும் அங்கீகரிப்பார்கள்.
தொடர்ந்து முன்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதாப் மன்னிப்பு கூறியது தொடர்பான கேள்விக்கு:
மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்கவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை. சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன், என்று தான் கூறியிருக்கிறார். அவருடைய பேச்சு அநாகரிக்க மற்ற செயல் அதை வரவேற்கக் கூடிய வகையில் தமிழக பிஜேபியினர் பேசுவது அதைவிட அநாகரீகமான செயல். மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒன்றிய அரசு எத்தகைய அனுகுமுறையை கொண்டிருக்கிறது என தேசிய அளவில் அனைவரும் உணர வேண்டும். வட இந்தியாவில் இருந்து வரக்கூடிய அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது.நாம் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆங்கிலத்தை அவர்கள் இன்னொரு மொழியாக கற்கவில்லை. என்பது என்னுடை கருத்து ஆகவே ஒரு மொழி கொள்கையை ஹிந்தி பேசக்கூடியவர்கள் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். தமிழக மாணவர்கள் அறிவாளிகளாக மாற்றுவதற்காக அல்ல ஹிந்தியை பேச வேண்டும் என்பதற்காக ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே நாடு ஒரே மொழி என்பது அல்ல இது அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.
புலனாய்வு ரீதியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்
இந்தியை யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும் மற்ற பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை அதே நேரத்தில் இந்தியை திணிப்பதை எதிர்க்கிறோம். தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. மதுரை, சிவகங்கை பகுதிகளில் சிறுவர்களை கொலை செய்திருக்கிறார்கள். மாணவர்களை தாக்கும் சம்பவமும் நடைபெறுகிறது. ஜாதி ரீதியான மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு புலனாய்வு ரீதியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதை இந்த சட்டமன்ற கூட்டத்தொடர்களிலேயே அரசிடம் வலியுறுத்துவோம். ஒரே தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்று நம்புகிறோம் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement