இயலாமைக்கு அக்கறையாளர்கள் மீது வழக்கா? : உச்சநீதிமன்றம் கேள்வி..

அரசாங்கத்தின் இயலாமைக்கெல்லாம் சமூக  அக்கறையுள்ள மக்கள் மீது வழக்கு தொடரக்கூடாது என நீதிபதிகள் காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US: 

கடந்த ஆண்டு ஜீலையில் மேகாலயாவின் பழங்குடிகள் அல்லாத மாணவர்கள் ஆறு பேர் மீது முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். காவல்துறையோ அல்லது மேகாலயா அரசாங்கமோ இந்த வன்முறை குறித்து மேலதிக விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை. அது குறித்து ஷில்லாங் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் பாட்ரீஷியா, ”அரசாங்கம் இந்த விவகாரத்தில் என்ன செய்கிறது?, உள்ளூர் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? “ என, சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதில் மேகாலயா முதல்வரையும் டேக் செய்திருந்தார்.

 இயலாமைக்கு அக்கறையாளர்கள் மீது வழக்கா? : உச்சநீதிமன்றம் கேள்வி..

சர்சைக்குரிய வகையில் முகநூல் பதிவு செய்ததாக மேகாலயா ஷில்லாங் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் பாட்ரீஷியாவை கைது செய்து அண்மையில் அம்மாநிலப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாட்ரீஷியாவின் பதிவு வெறுப்பைத் தூண்டும்  வகையில் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையை செல்லாது என அறிவிக்கும்படி வழக்கு தொடர்ந்தார் பாட்ரீஷியா. ஆனால்  அப்படி அறிவிக்க முடியாது என மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பாட்ரீஷியா.

இயலாமைக்கு அக்கறையாளர்கள் மீது வழக்கா? : உச்சநீதிமன்றம் கேள்வி..

அவ்வழக்கு நீதிபதி நாகேஸ்வரா தலைமையிலான அமர்வுக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் பாட்ரீஷியா மீதான முதல் தகவல் அறிக்கையை செல்லாது என அறிவித்து வழக்கை முடித்து வைத்த நாகேஸ்வரா மற்றும் ரவீந்திர பட் தலைமையிலான அமர்வு, ‛சமூகத்தின் அமைதியைக் குலைத்து வெறுப்பைத் தூண்டும் வகையில் பேச்சுக்கள் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்; மாறாக குடிமக்களின் பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரக்கூடாது” என கண்டனம் தெரிவித்தனர்.  அரசாங்கத்தின் இயலாமைக்கெல்லாம் சமூக  அக்கறையுள்ள மக்கள் மீது வழக்கு தொடரக்கூடாது என்றும் நீதிபதிகள் காவல்துறையை கடிந்து கொண்டனர்.

Tags: supreme court chief minister meghalaya patricia mukhim conrad sangma freedom of speech Journalist

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

MOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

MOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..!

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..!

Hajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு

Hajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு

டாப் நியூஸ்

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!