Presidential Election Result 2022 LIVE: இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராகிறார் திரெளபதி முர்மு..!
India Presidential Election Result 2022 LIVE: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்பான உடனுக்குடன் தகவல்கள் இதோ...
LIVE

Background
இந்தியாவின் 15-வது குடியரசு தலைவரானார் திரெளபதி முர்மு..!
மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்த வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு. அவர் வாக்குகளின் மதிப்பு 5,77,777. எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 2,61,062. மூன்று சுற்றுகளிலும் திரெளபதி முர்மு முன்னிலை பெற்றதால் அவரது வெற்றி உறுதியாகி விட்டது.
குடியரசுத்துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வில் கலந்தாலோசிக்கவில்லை - திரிணாமுல் காங்கிரஸ்
குடியரசுத்துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில், தங்களை கலந்தாலோசிக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
2 வது சுற்று: பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை..!
குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 2 ஆம் சுற்று நிறைவில், பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 4,83,299 ஆகும்.
பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை
15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 18 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வருகிறார்.
Presidential Election Result 2022 LIVE: குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் படங்கள்:
Delhi | Counting of votes for Presidential election underway in Parliament pic.twitter.com/XBf84ADeEc
— ANI (@ANI) July 21, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

