மேலும் அறிய

PM Modi: "குழந்தையா இருக்கும்போது இந்த மாறி வீட்டில இருக்கதான் ஆசைப்பட்டேன்" - கண் கலங்கிய பிரதமர் மோடி!

அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி ஜனவரி 22ஆம் தேதி அன்று மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 மகாராஷ்டிரா மாநிலம் சென்ற பிரதமர் மோடி, இன்று நடந்த நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 15 ஆயிரம் வீடுகளை பயனாளர்களுக்கு திறந்து வைத்தார். பின்னர், இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் மிகப்பெரிய சமுதாயத்தின் திறப்பு விழா நடந்துள்ளது.

கண்கலங்கிய பிரதமர் மோடி:

நான் குழந்தையாக இருந்தபோது இதுபோன்ற ஒரு வீட்டில் வாழ வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். தற்போது, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நனவாகியிருப்பதைக் காணும்போது நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

அவர்களின் ஆசீர்வாதமே எனக்கு மிகப் பெரிய சொத்து" என்று கண்கலங்கி பிரதமர்  மோடி பேசினார்.  தொடர்ந்து பேசிய அவர், "நாட்டில் வறுமை தொடர்ந்து வருகிறது. வறுமை ஒழிய வேண்டும் நீண்ட காலமாக கோஷங்கள் மட்டும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், வறுமையை ஒழிக்க என் தலைமையிலான அரசு 10 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை  அமல்படுத்தி வருகிறது.

”வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்"

சமூகத்தின் விளிம்புநிலைகளில் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான எனது தலைமையிலான அரசு தொடந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது அரசு ஏழைக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசு என்று கூறியிருந்தேன். எனவே, ஏழைகளில் சிரமங்களை குறைத்து, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் இதுபோன்ற திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தினோம். 

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மதிக்க கற்றுக்கொடுத்தார் ஜெய் ஸ்ரீராம் . ராமரும் தன் மக்களை மகிழ்விக்கும் வேலையைச் செய்தார்.அதேபோலவே எனது அரசு ஏழை மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது.

எனவே, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22ஆம் தேதி அன்று மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள். மக்கள் ஏற்றும் ராமஜோதி விளக்கு அவர்களின் வாழ்வில் இருந்து வறுமையை அகற்ற உத்வேகமாக  இருக்கும்” என்றார் பிரதமர் மோடி.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார்.

இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, அந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! புதுச்சேரிக்கு 22ம் தேதி பொது விடுமுறை - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget