இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
மனு பாக்கர், டி. குகேஷ், ஹர்மன்பிரீத் சிங், பிரவீன் குமார் ஆகிய நான்கு விளையாட்டு வீரர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் அறிவித்துள்ளது.
கடந்தாண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பதக்கம் வென்ற மனு பாக்கர், சமீபத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய டி. குகேஷ், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகிய நால்வருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனு பாக்கர், குகேஷை கௌரவப்படுத்திய மத்திய அரசு:
இதுதொடர்பான அறிவிப்பை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதோடு, 17 பாரா விளையாட்டு வீரர்கள் உட்பட 32 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன் ஆகியோர் அர்ஜுனா விருதினை பெற உள்ளனர்.
அர்ஜுனா விருதினை வென்றவர்களின் பட்டியல்:
இவர்களை தவிர, ஜோதி யர்ராஜி, அன்னு ராணி, நிது, சாவீட்டி, வந்திகா அகர்வால், சலிமா டெட்டே, அபிஷேக், சஞ்சய், ஜர்மன்ப்ரீத் சிங், சுக்ஜீத் சிங், ராகேஷ் குமார், ப்ரீத்தி பால், ஜீவன்ஜி தீப்தி, அஜீத் சிங், சச்சின் சர்ஜராவ் கிலாரி ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Arjuna Award 2024 recipients: Jyothi Yarraji, Annu Rani, Nitu, Saweety, Vantika Agrawal, Salima Tete, Abhishek, Sanjay, Jarmanpreet Singh, Sukhjeet Singh, Rakesh Kumar, Preeti Pal, Jeevanji Deepthi, Ajeet Singh, Sachin Sarjerao Khilari, Dharambir, Pranav Soorma, H Hokato Sema,… pic.twitter.com/3lZ6FpnaSJ
— IANS (@ians_india) January 2, 2025
தரம்பீர், பிரணாபிர், பிரணாபிர் , சிம்ரன், நவ்தீப், நித்தேஷ் குமார், மனிஷா ராமதாஸ், கபில் பர்மர், மோனா அகர்வால், ரூபினா பிரான்சிஸ், ஸ்வப்னில் சுரேஷ் குசலே, சரப்ஜோத் சிங், அபய் சிங், சஜன் பிரகாஷ் மற்றும் அமன் ஆகியோருக்கும் மத்திய அரசு அர்ஜுனா விருதுகளை அறிவித்து கௌரவித்துள்ளது.
இதையும் படிக்க: Mahindra Car Launch 2025: ”ஈவி சந்தை எனக்கு தான்” புது மின்சார கார்களை களமிறக்கும் மஹிந்திரா - இத்தனை மாடல்களா?