மேலும் அறிய

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது.. அதிரடி காட்டிய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்

ஆம்பூர் அருகே தொடக்க பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலில் சீண்டலில் ஈடுபட்டு போக்சோ  சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்ட நிலையில் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

ஆம்பூர் அருகே 5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டியுள்ளார்.

தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் பாரத் அம்பேத்கார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு குடி போதையில் வந்த தலைமை ஆசிரியர் 5 ஆம் வகுப்பு மாணவியை தன் மடியில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆதாரங்கள் அழிப்பு

இதனை பார்த்த கிராமமக்கள் வீடியோ காட்சி பதிவு செய்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர்.புகாரின் பேரில் மாதனூர் வட்டார கல்வி அலுவலர்கள் பீட்டர் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையின் போது பொதுமக்கள் சிலர் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகளை காண்பித்துள்ளனர். இதனை அறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்கள் தங்களுடைய செல்போன்களில் பதிவு செய்திருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அழித்ததாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கெனவே புகார்கள்

மேலும் ஏற்கனவே பேரணாம்பட்டு ஒன்றியம் அரவட்லா, மாதனூர் ஒன்றியம் காட்டு வெங்கடாபுரம்,  சம்பந்திகுப்பம் அடுத்த பள்ளவல்லி,  ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் பணிபுரிந்த நேரத்தில் இதே போன்ற தவறு செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

போக்சோ சட்டத்தில் கைது:

இதற்கு இடையில் தற்போது மேல் சானாங்குப்பம் பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உமராபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியரை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் சஸ்பெண்ட்

அதன் அடிப்படையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர் என்பவரை பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஆம்பூர் அருகே தொடக்க பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலில் சீண்டலில் ஈடுபட்டு போக்சோ  சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்ட நிலையில் பணியிட நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget