தமிழ் நடிகைகளை வைத்து பாலியல் தொழில்?.. 41 வயதிலும் அடங்காத ஆசை.. சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த இந்தி நடிகை மூன் தாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மும்பை அடுத்த தானே பகுதியில் உள்ள காஷ்மிரா என்ற பகுதியில் வைத்து இவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகை மோனி மோகன் தாஸ். இவருக்கு 41 வயது ஆகிறது. பெங்காலி, இந்தி படங்களில் நடித்துள்ளார். மோனி மோகன் தாஸ் என்பதை சுருக்கி மூன் தாஸ் என்று ரசிகர்கள் இவரை அழைப்பது வழக்கம்.
பிரபல நடிகை கைது
இந்நிலையில், இவர் நடிகைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காஷிமிரா பகுதிக்கு சென்ற போலீசார் அங்குள்ள போலி கஸ்டமர்களை வைத்து ரேட் பேச வைத்துள்ளனர். போலீஸ் வருவது முன்கூட்டியே தெரிந்துகாெண்டால் தப்பித்து விடுவார் என்பதால் போலீசார் மப்டியில் சென்றுள்ளனர். அப்போது நடிகை மூன் தாஸ் மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மிரா ரோட்டிலுள்ள, ஒரு பிரபல மாலுக்கு வந்து தன்னை சந்திக்க கூறியுள்ளார். இதையடுத்து போலி கஸ்டமர்கள் இருவர் அவர் சாென்ன மாலுக்கு சென்றனர். அப்போது அவரிடம் ரேட் குறித்து பேசியபோது உல்லாசமாக இருக்க பிரபல நடிகைகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகைகளை வைத்து பாலியல் தொழில்
இதன் பின்னர், மூன் தாஸ் கஸ்டமர்களிடம் பணத்தை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் எத்தனை நடிகைகள் பிடியில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். அதில், தமிழ், தெலுங்கு, இந்தி நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இதில், சீரியல் நடிகைகளும் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகமாக பணக்காரர்களையே மூன் தாஸ் குறிவைத்துள்ளார் என்றும், செல்வந்தர்களிடம் அதிக பணத்தை பெற்று அவர்களுக்கு பிடித்த நடிகையை அனுப்பி வைப்பதாக மூன் தாஸ் ஒப்புக்கொண்டார். மேலும், மூன் தாஸால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 2 நடிகைகளை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். சினிமாவில் நடிக்க ஆர்வத்தோடு இருக்கும் இளம்பெண்களை சந்தித்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.





















