Mumbai Rave Party: சொகுசு கப்பலில் போதை விருந்து - சிக்கினாரா பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகன்?
சோதனையின்போது கைது செய்யப்பட்டவர்களில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஒருவரின் மகனும் இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர்களின் குழந்தைகள் விசாரிக்கப்படுவதை என்சிபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்
மும்பையில் நேற்று சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (என்சிபி) குறைந்தது 10 பேரை கைது செய்தது.
கார்டெலியா குரூஸ் லைனரின் உல்லாச கப்பலில் நடத்தப்பட்ட சோதனையின் போது கோகோயின், ஹஷிஷ் மற்றும் பிற சட்டவிரோத மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சோதனையின்போது கைது செய்யப்பட்டவர்களில் பாலிவுட் சூப்பர்ஸ்டாரின் மகனும் இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகர்களின் குழந்தைகள் விசாரிக்கப்படுவதை என்சிபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்
#WATCH | Narcotics Control Bureau (NCB) detained at least 10 persons during a raid conducted at a party being held on a cruise in Mumbai yesterday
— ANI (@ANI) October 2, 2021
(Visuals from outside NCB office) pic.twitter.com/yxe2zWfFmI
ரகசிய தகவல் கிடைத்ததும், என்சிபி அதிகாரிகள் பயணிகள் வேடமிட்டு கப்பலுக்குள் நுழைந்து பின்னர் சோதனையை நடத்தினர். இந்த விருந்துக்கு ஒரு நபரின் நுழைவு விலை சுமார் 80,000 ரூபாய் என்பதால் இந்த விருந்து மிக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கப்பல் கோவாவுக்கு சனிக்கிழமை புறப்பட இருந்தது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஃபேஷன் டிவி இந்தியா’ கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் நடத்தியுள்ளனர். இதில்தான் போதைப் பொருள் விருந்து நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
என்சிபி மற்றொரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை முறியடித்து ஒரு நாள் கழித்து, ஹைதராபாத்தில் இருந்து மும்பை வழியாக ஆஸ்திரேலியா செல்லும் போதைப்பொருள் சரக்குகளை பறிமுதல் செய்தது. பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலியின் சகோதரர் கூட போதைப்பொருள் வைத்திருந்ததற்காக இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக என்சிபியால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு மறைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்புடையது. என்சிபி இரண்டாவது முறையாக கோகோயின் வழக்கில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அஜிசிலாஸ் டிமெட்ரியாட்ஸை கைது செய்தது. கோவாவில் கைது செய்யப்பட்டு, தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மும்பை மற்றும் கோவாவிற்கான என்சிபி மண்டல இயக்குனர் சமீர் வான்கடே, கடந்த மூன்று நாட்களாக கோவாவில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் போது, இரண்டு சோதனைகளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.