மேலும் அறிய

லதா மங்கேஷ்கர் - சமாதானம் பேச முயற்சித்த குரல்..

ஆக்கிரமிப்புத் தன்மை, வன்முறை கொண்ட ஆண் சமூகத்துடன் ஒரளவு சமாதானம் பேச முயற்சித்த லதா மங்கேஷ்கரின் குரலும் தற்போது மறைந்து விட்டது

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி   இந்திய பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். உலகம் முழுவதிலும் உள்ள அவரது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் சோகத்தில் இந்திய அரசும் பங்கு கொண்டது. 

அதன்படி, பிப்ரவரி 06 மற்றும் 07 ஆகிய நாட்களில் இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசுமுறை உபசரிப்பு மற்றும் பொழுதுபோக்கு எதுவும் இருக்காது என்றும் தெரிவித்தது. மேலும், மறைந்த லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கும் நடத்தப்பட்டது.   

லதா மங்கேஷ்கர் மறைவுக்குப் பிறகு, நடந்த சில நிகழ்வுகள் பலரையும் வருத்தப்படும் வகையில் அமைந்தது. உதாரணமாக, மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்ற லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கின் போது, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மறைந்த பிரமுகருக்கு துவா செய்த சம்பவத்தை அடிப்படைவாதிகள் சிலர் எச்சில் துப்பியதாகக்  கொச்சைப்படுத்தினர். 

லதா மங்கேஷ்கர் - சமாதானம் பேச முயற்சித்த குரல்..

மாநிலங்களவையில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதிலுரை அளித்த பிரதமர் மோடி, சாவர்க்கரின் தேசப்பற்று கவிதைகளை ஹிருதயநாத் மங்கேஷ்கர் (லதா மங்கேஷ்கரின் சகோதரர்) பாடியதற்காக அவரை ஆல் இந்திய நிறுவனத்தில் இருந்து எட்டு நாட்களில் காங்கிரஸ் கட்சி வெளியேற்றியது. இதுதான், காங்கிரஸ் கட்சியின் கருத்து சுதந்திரம்" என்று தெரிவித்தார். 

மேலும், அயோத்தியில் சர்ச்சைக்குரிய ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை மறக்கவே முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் ட்விட்டர் பதிவும் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது.  தமது 13 வயதில், கிட்டி ஹசால் என்னும் மராத்தி படத்துக்காக முதன்முதலில் திரை உலகில் கால்பதித்த ஒரு மாபெரும் பிரமுகரின் சாதனைகள் யாவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா? (இல்லை) பெண்ணினத்தின் குரல்களைக் கடைசிவரை இச்சமூகம் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளவில்லையா?  என்ற கேள்வியும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.  

பெண்களின் குரல்: 

இந்தியாவில், காந்தியின் அரசியல் வருகைக்குப் பிறகு, விடுதலைப் போரில் பெண்களின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. ஒட்டுமொத்த சுதந்திரப்  போராட்டத்தையும் பெண்மைப்படுத்தியதில் (Feinization) காந்தியின் பங்கு அளப்பரியது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த போக்கும் தேசியவாதம் என்ற எல்லைகளுக்கு உட்பட்டு இருந்தது. தூய்மை, கற்பு, மௌனம், போன்றவைகளை இந்திய பெண்களின் குணாதியசங்களாக சித்தரித்து, இந்தியா என்ற தேசத்தின் பாரம்பரியத்தை விளக்கினார். மேற்கத்திய நாகரிகத்தை விட, கிழமை நாடுகளின் பாரம்பரியம் உயர்ந்தது என்பதை விளக்கவே பெண்கள் பயன்படுத்தப்பட்டனர்.

லதா மங்கேஷ்கர் - சமாதானம் பேச முயற்சித்த குரல்..
வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி வரைந்த பாரத மாதா 

இந்திய தேசம் (பாரத மாதா) பெண்ணாக சித்தரிக்கப்பட்டது. பாரத மாதாவை சிறைப்பிடுத்துள்ள அந்நியரை விரட்டியடிப்போம், தூய பாரத மாதாவை மீட்டேடுப்போம்  என்ற அளவில் தான் சுதந்திர முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதே, தேசியவாத சிந்தனையில் தான் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை பாலகங்காதர திலகர் போன்ற  சுதேசிகள் எதிர்த்தனர். சுருங்க சொன்னால், ஆண்களின் பார்வையில், ஒரு குறிப்பிட்ட பார்வையில்,  பெண்மை எனும் கருத்தியல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  

சினிமாவின் குரல்:  

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில், பெண்களுக்கு கல்வி, வாக்களிக்கும் உரிமை, விவாகரத்துச் செய்யும் உரிமை போன்ற பல்வேறு பாலின சமத்துவ நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. நவீனப் பொருளாதாரம், உயர்க்கல்வி, விளையாட்டுப் போட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,நாளிதழ், ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவைகள் நவீன சமூகத்தை தோற்றுவித்தன.

இதில், குறிப்பாக சினிமாவின் பங்கு அளப்பரியது. 50-களில் முதன்முறையாக வாக்குரிமையை பெற்ற பெண்களின் வழிகாட்டியாக, திரைக்கதையில் பெண் கதாபாத்திர படைப்புகள் இருந்தன. திரையில், பெண் கதாபாத்திரங்கள் பேசிய வசனங்கள் மூலம் தான் இந்தச் சமூகம் பெண்மை ஏற்படுத்திய ஒலியை  முதன் முறையாக உணரத் தொடங்கியது. அது, உருவாக்கிய அதிர்வலையில் இன்றளவு இந்த ஆண் சமூகம் தனது நிதானத்தை இழந்து தவிக்கிறது. 

லதா மங்கேஷ்கர் - சமாதானம் பேச முயற்சித்த குரல்..

எவ்வாறாயினும், நடத்தை விதிமுறைகள்/ஒழுக்கம்/கற்பு/அறநெறி போன்றவைகளை மட்டுமே பெண்மைக்குரிய அசாத்திய குணங்கள் என்றும், இந்த குணங்கள் மட்டுமே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது போன்ற பிம்பத்தை சினிமா உருவாக்கியது.  பொருளாதார வளர்ச்சி, சினிமா வர்த்தக கட்டமைப்பு, பிராந்திய அரசியல்,தேசியவாதம் போன்ற பல்வேறு பல்வேறு காரணங்களால் இந்த போக்கு அதிகரித்து காணப்பட்டதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த இடத்தில் தான், பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் தனித்துவ குரலைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவ தெரிவிக்கின்றார். 'The Voice of the nation and the five year plan hero',என்ற தனது கட்டுரையில், " இந்திய இசையில், இதுதான் பெண்ணின் குரல் என்று எதுவுமே இல்லை. அது, பல்வேறு கூறுகளையும், வேறுபாடுகளையும் கொண்டது. பெண்களின் குரலை பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று அளவுகோளுக்கு உள்ளே கொண்டு சேர்த்த பெருமை லதா மங்கேஷ்கருக்கு உண்டு. பெண்களின் குரலை, தொழிற்படுத்தி, ஒட்டுமொத்தப்படுத்தல் செய்துள்ளார். இந்திய இசைக்கே உரித்தான சிதைவு, வேறுபாடு, முரண்பாடு எல்லாம் களையப்பட்டு விட்டது. இது மிகவும் சிக்கலான ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.  

உதாரணமாக, சத்யா திரைப்படத்தில் வரும் வலையோசை பாடலில், சத்யா (கமல்ஹாசன்), கீதா (அமலா) பொது வெளியில் சற்று இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும், லதாவின் குரல் கீதாவின் செயலை மேன்மை பொருந்தியதாக, உன்னதமிக்கதாக காட்டியது. லதாவின் குரல் இல்லை என்றால், சமூகம் இதனை ஒரு கலாச்சார சீரழிவாகவே கருதியிருக்கும். அதாவது, திரையில் நடத்தை விதிமுறைகளை கடந்த பெண் கதாபத்திரங்களை ஏற்றுக்கொள்ள செய்த சமரசமாக, இடைமையாக (Mediator) லதா மங்கேஷ்கரின் குரல் இருந்ததாக குறிப்பிடுகிறார். 

     லதா மங்கேஷ்கர் - சமாதானம் பேச முயற்சித்த குரல்..

எதிர்காலத்தின் பெண்களின் குரல்:

60களுக்கு முன்புவரை தமிழ் திரைத்துறையில், ஆண் நடிகர்களுக்கு இணையாக பெண்கள் தங்கள் பாத்திரங்களுக்கு சொந்தமாக குரல் கொடுத்து வந்தனர். எம்ஜிஆர்/ சிவாஜிக்கு இணையாக நடிகை சரோஜா தேவியின் குரலுக்கு இன்றளவும் ரசிகர்கள் பட்டாளம் உண்டென்றால் அது மிகையாகாது. ஆனால், 70களுக்குப் பிறகு, இந்த நிலை முற்றிலும் தலைகீழாக மாறியதாக மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் 'Premalatha Karupiah' தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கிறார். 1960 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களில், கிட்டத்தட்ட 65% நாயகிகள் தங்கள் பாத்திரங்களுக்கு சொந்தமாகக் குரல் கொடுக்கவில்லை.

இதில், தமிழ் தெரிந்த மூன்று கதாநாயகிகளும் அடங்கும்.இதனால், குரலை வைத்து பெண் கதாநாயகிகளை அடையாளம் காண முடியாத சூழல் நிலவுகிறது.ஆனால், ஆண்களைப் பொறுத்தவரையில் இரண்டு, மூன்று நடிகர்களைத் தாண்டி (மைக் மோகன், சுதாகர்) மற்ற அனைவருமே தங்கள் சொந்தக் குரலிலிலேயே பேசுகின்றனர்.  இதர மாநிலங்களிலிருந்து தமிழ் துறைக்கு வந்த நடிகர்கள் கூட (ரஜினி, மம்மூட்டி, பிரகாஷ் ராஜ்) தங்கள் சொந்த குரலிலேயே பேசுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.                       

சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள  பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், நாடோடிகள் போன்ற விளம்புநிலை மாந்தர்கள் தங்கள் பிரச்சனைகளை சுயமாக பேச முடியுமா? என்ற கேள்வியை, (Can the Subaltern Speak?) காயத்ரி ஸ்பிவாக் தனது ஆய்வுக் கட்டுரையில் கேட்டிருந்தார். தங்களுக்கே உரிய சமூக ஒடுக்கல் பற்றி குரல் எழுப்பாமல் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், இன்று மீண்டும் குரலற்றவர்களாகவே உள்ளனர். ஆக்கிரமிப்புத் தன்மை, வன்முறை கொண்ட ஆண் சமூகத்துடன் ஒரளவு சமாதானம் பேச முயற்சித்த லதா மங்கேஷ்கரின் குரலும் தற்போது மறைந்து விட்டது.        

கட்டுரைக்கு பயன்பட்டவை: 

1.  The Voice of the Nation and the Five-Year Plan Hero: Speculations on
Gender, Space, and Popular Culture - Sanjay Srivastava

2. Voiceless Heroines: Use of Dubbed Voices in Tamil Movies -  Premalatha Karupiah

3.Brought to Life by the Voice: Playback Singing and Cultural Politics in South India - Amanda Weidman 

4. Rare ‘aural’ stars of Indian films - The hindu 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget