Headlines Today, 6 Dec: உயரும் ஒமிக்ரான்... விஜய்சேதுபதி மீது வழக்கு... புடின் வருகை... சபரியில் கூட்டம்... இன்னும் பல!
Headlines Today, 6 Dec: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற, இன்று நடக்கவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* அதிமுக உள்கட்சி தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. இன்று அறிவிப்பு வெளியாகும்.
* ஜெயலலிதா கொடுத்துச்சென்ற தமிழகத்தில் கொலையில்லை; கொள்ளையில்லை என ஜெயலலிதா நினைவு தினத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உறுதிமொழியை முன்மொழிந்தார்.
* தமிழ்நாட்டில் இன்று முதல் மழை குறையும் என்றும் வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.
* தமிழ்நாட்டில் நேற்று 724 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி; 743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10 பேர் உயிரிழப்பு.
* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
* நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியா:
* புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
* இந்தியாவில் ஒமிக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று உறுதியானது.
* திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தவர்களின் கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 1 குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
* நாகலாந்தில் உள்ள மோன் நகரில் பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
* இரட்டை இலை வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகர், விசாரணையின்போது நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிக்கத்தக்க குதிரையும் 9 லட்சம் மதிக்கத்தக்க பெர்சியன் பூனையும் பரிசாகக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
* சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
உலகம்:
* இந்தியா - ரஷ்யா இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று டெல்லி வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்.
* ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயத்தால், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜப்பான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
* கென்யாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பேருந்து விபத்தில் சிக்கியதில் 31 பேர் உயிரிழந்தனர்.
விளையாட்டு:
* இந்தியா நிர்ணயித்த 540 ரன்கள் இலக்குடன் ஆடி வரும் நியூசிலாந்து அணி 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கடைசி நாளான இன்று இந்தியாவின் கையே ஒங்கியுள்ளது.
* 2021 உலக டூர் பைனல் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்