மேலும் அறிய
Advertisement
Headlines Today, 2 May: வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு... அதிகரிக்கும் வெயில்.. சச்சின் சாதனையை சமன் செய்த ருது..இன்னும் பல!
Headlines Today, 2 May: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- வர்த்தக சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிப்பு : சென்னையில் ரூ. 2, 355 ஆக நிர்ணயம்
- தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைப்பு : தமிழ்நாடு அரசு உத்தரவு
- சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி 'முத்தமிழறிஞர் கலைஞர் சாலை' என அழைக்கப்படும் : முதலமைச்சர் முக ஸ்டாலின்
- சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம் : மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மாற்றம் : அமைச்சர் மா. சுப்ரமணியன் அதிரடி
- மே 1 ம் தேதி விடுமுறை என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் டாஸ்மாக்கில் ரூ. 252.34 கோடிக்கு மது விற்பனை
- 3 இடங்களில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது : தமிழ்நாட்டில் 3 நாளைக்கு வெப்ப அலை வீசும் என அறிவிப்பு
- மதுரையில் மேம்பாலம் கட்டுமான பணிகளில் மீண்டும் விபத்து : கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்
இந்தியா :
- வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
- கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1.68 லட்சம் கோடி ரூபாய் பணம் ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்
- பஞ்சாபின் பாட்டியாலாவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட பர்வானா உள்பட 6 பேர் கைது
- பயணியர் ரயில்களை விட நிலக்கரி ஏற்றி செல்லும் ரயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் தகவல்
- இந்தியாவில் மருந்து ஏற்றுமதி எட்டு ஆண்டுகளில் 103 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல்
உலகம் :
- உக்ரைன் சென்றுள்ள அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
- உக்ரைன் ரஷ்ய போருக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி இன்று பயணம் : எட்டு உலக தலைவர்களுடன் சந்திப்பு
- இலங்கையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகக்கோரி பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு :
- டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஹைதராபாத் அணிக்கு எதிரான மற்றொரு போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஐபிஎல் தொடரில், 31 இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டி சாதனைப் படைத்திருக்கிறார் ருதுராஜ். இது சச்சினின் ரெக்கார்டை சமன் செய்வதாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion