International Yoga Day: சர்வதேச யோகா தினம் - பெருங்கடல் தொடங்கி கரடுமுரடான மலை உச்சி வரையில் ராணுவ வீரர்கள் கொண்டாட்டம்
International Yoga Day: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பல்வேறு இடங்களில் இந்திய ராணுவ வீரர்கள், யோகா பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

International Yoga Day: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பெருங்கடல் தொடங்கி கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும், இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
சர்வதேச யோகா தினம்:
சர்வதேச யோகா தினத்த ஒட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஊக்குவிக்கும் விதமாக, இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பல்வேறு முகாம்களில் இருந்தபடியே யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கடும் பனி பொழியும் மலை உச்சிகளில் தொடங்கி வலிமைமிக்க கடல்கள் வரை, ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
#WATCH | Indian Army personnel perform Yoga in icy heights on the northern frontier on #InternationalYogaDay2024
— ANI (@ANI) June 21, 2024
(Source: Indian Army) pic.twitter.com/7zjIBfJ0Ye
#WATCH | Indian Army troops perform Yoga in Eastern Ladakh on #InternationalYogaDay2024
— ANI (@ANI) June 21, 2024
(Source: Indian Army) pic.twitter.com/kYpzYdMYmz
இந்திய ராணுவப் படையினர், வெள்ளை உடைகள் மற்றும் மூச்சுத்திணறலை சமாளிப்பதற்கான முகமூடிகளை அணிந்து, பனியால் மூடப்பட்ட வெள்ளை நிலப்பரப்பில் வடக்கு எல்லையில் யோகா செய்தனர். அதே நேரத்தில் கடற்படை வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து INS விக்ரமாதித்யாவில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
#WATCH | Yoga onboard aircraft carrier INS Vikramaditya #InternationalYogaDay pic.twitter.com/ROBw82yvph
— ANI (@ANI) June 21, 2024
VIDEO | International Yoga Day: ITBP troops perform Yoga at an altitude of over 15,000 feet in the Muguthang Sector of #Sikkim along the Indo-China border.#InternationalYogaDay #YogaDay
— Press Trust of India (@PTI_News) June 21, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/nRF23EENwv
இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பணியாளர்கள் 15,000 அடி உயரத்தில், வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் துணைத் துறையிலும் யோகா செய்தனர். கிழக்கு லடாக்கிலும் இந்திய ராணுவ படையினர் யோகா செய்வதைக் காண முடிந்தது.
#WATCH | ITBP personnel perform Yoga at Muguthang Sub Sector in North Sikkim at an altitude of more than 15,000 feet, on the 10th International Yoga Day.#InternationalYogaDay2024
— ANI (@ANI) June 21, 2024
(Source: ITBP) pic.twitter.com/oBY9Xuznb8
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பழமையான உடற்பயிற்சியை செய்ய அரசியல்வாதிகள் முதல் சாமானியர்கள் வரை பலரும் அதிக ஆர்வம் காட்டுகின்ரனர். "சுய மற்றும் சமூகத்திற்கான யோகா" என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
#WATCH | On #InternationalYogaDay, school children perform Yoga alongside Pangong Tso lake in Ladakh.
— ANI (@ANI) June 21, 2024
(Source: Indian Army) pic.twitter.com/SLEfie4yv8
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

