மேலும் அறிய

Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளிடம் ஆதாரம் கேட்ட காவல்துறை.. பா.ஜ.க. எம்பியை காப்பாற்றும் முயற்சியா..? நடப்பது என்ன?

தங்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஏதேனும் இருந்தால் அதை சமர்ப்பிக்குமாறு டெல்லி காவல்துறை கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் அளித்த மல்யுத்த வீராங்கனைகளிடம் டெல்லி காவல்துறை ஆதாரம் கேட்டுள்ளது. தங்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஏதேனும் இருந்தால் அதை சமர்பிக்குமாறு டெல்லி காவல்துறை கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதாரம் கேட்ட காவல்துறை:

காவல்துறை அதிகாரிகளும் தாங்களாகவே ஆதாரங்களைச் சேகரிக்க முயன்று வருகின்றனர். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 91இன்படி, காவல்துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்பான எந்த ஆவணத்தையும் கேட்டு பெற்றும் கொள்ளும் அதிகாரத்தை விசாரணை அதிகாரிக்கு இந்த சட்டம் வழங்குகிறது.

இதனிடையே, காவல்துறை விசாரணை மீது மல்யுத்த வீராங்கனைகள் நம்பிக்கை வைக்கவில்லை என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பாஜக எம்பியை காப்பாற்றும் முயற்சி நடந்துள்ளது. அவர் சிறையில் இருந்து வெளியில் இருப்பது விசாரணைக்கு இடையூறாக உள்ளது" என்றார்.

பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்களை, டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. டெல்லி காவல்துறை, இதுவரை, 200க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.

"அத்துமீறிய பாஜக எம்பி"

அந்த வகையில், கடந்த மே 20ஆம் தேதி, சர்வதேச மல்யுத்த நடுவர் ஜக்பீர் சிங்கின் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை ஜக்பீர் சிங் பகிர்ந்தார். கடந்தாண்டு மார்ச் மாதம், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மல்யுத்த வீராங்கனையிடம் பிரிஜ்பூஷன் அத்துமீறி சீண்டலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிஜ் பூஷன் சிங்கின் பயங்கரமான முகத்தை பார்த்ததாக கூறியுள்ள ஜக்பீர் சிங், "தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியின் இரவு உணவு நிகழ்ச்சியின் போது, ​​குடிபோதையில் வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் சிங் மானபங்கம் செய்தார். அவரது காட்டுமிராண்டித்தனம் தாங்க முடியாத ஒன்றாக இருந்தது" என்றார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி, ஆசிய சாம்பியன்ஷிப் (சீனியர்) போட்டியின் பயற்சி ஆட்டத்திற்கு பிறகு புகைப்பட அமர்வு நடைபெற்றது. அப்போது, தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் ஏழு பேர் புகார் அளித்தனர்.

"மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளருடன் வழக்கமான புகைப்படம் எடுக்க வீராங்கனைகள் மேடையில் கூடியிருந்தனர். அப்போது, வீராங்கனையின் பின்புறத்தில் அவரின் அனுமதியின்றி பிரிஜ்பூஷன் கை வைத்தார். இது,மிகவும் அநாகரீகமானது மற்றும் ஆட்சேபனைக்குரியது என வீராங்கனை தெரிவித்தனர்" என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget