Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Mysuru Affair Murder: தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னையால் பெண்ணின் வாயில் வெடிமருந்தை வைத்து வெடிக்கச் செய்த மைசூர் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Mysuru Affair Murder: தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னையால் பெண்ணின் வாயில் வெடிமருந்தை வைத்து வெடிக்கச் செய்த சம்பவம் மைசூரை உலுக்கியுள்ளது.
தகாத உறவால் கொடூர கொலை:
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் அரங்கேறிய கோர சம்பவம் கேட்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திருமணமான 20 வயது பெண்ணுடன் தகாத உறவில் இருந்த இளைஞர், அந்த பெண்ணின் வாயில் வெடிமருந்தை வெடிக்கச் செய்து கொடூர கொலையை நிகழ்த்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதில் அந்த பெண்ணின் கீழ் தாடை முற்றிலுமாக சிதைந்து இருப்பதை காண முடிகிறது.
நடந்தது என்ன?
கொல்லப்பட்ட நபர் ரக்ஷிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹுன்சூர் தாலுகாவைச் சேர்ந்த கெரசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இவர், பெர்யா கிராமத்தில் உள்ள ஒரு அறையில் இருந்து தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அங்கு அந்த பெண் திருமணத்தை மீறி தன்னுடன் உறவில் இருந்த, காதலன் சித்தராஜுடன் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தினக்கூலி ஒருவரை திருமணம் செய்து இருந்த ரக்ஷிதா, பெரியபட்னா தாலுகாவில் உள்ள பெட்டடடபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு என்பவருடன் தகாத உறவையும் பின்பற்றி வந்துள்ளார்.
”போன் வெடித்து மரணம்”
இந்நிலையில் தான், கடந்த சனிக்கிழமையன்று கப்படி பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்ற ரக்ஷிதா - சித்தராஜு ஜோடி, பிறகு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அறையில் இருந்த பலத்த சத்தம் கேட்டு லாட்ஜ் ஊழியர்கள் அங்கு ஓடி வர, ரக்ஷிதா முகம் சிதைந்து ரத்தம் பெருக்கெடுத்த ஓடி உயிரிழந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்சார வயர்கள் அறையில் சிதறி கிடக்க, செல்போன் வெடித்ததில் ரக்ஷிதா உயிரிழந்ததாக சித்தராஜு தெரிவித்து அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். உடனடியாக லாட்ஜ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, அவனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாயில் வெடிமருந்து திணிப்பு..
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சித்தராஜு முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தீவிர விசாரணையில், “இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவதாம் முற்றியதில், தான் மறைத்து வைத்து இருந்த வெடிமருதுகளை ரக்ஷிதாவின் வாயில் திணித்து ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி வெடிமருந்தை வெடிக்கச் செய்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. சித்தராஜு கைது செய்யப்பட்டுள்ளார்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை:
இதனிடையே, லாட்ஜில் இருந்து ரக்ஷிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவால் அரங்கேறும் கொலைகள், நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





















