Delhi Rain: டெல்லியில் 88 ஆண்டுகளில் இல்லாத மழை: ஆறாக மாறிய சாலைகள்: மூழ்கிய கார், லாரியின் காட்சிகள்
Delhi Rain: கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் பெய்த கனமழையால் வாகனங்கள் நீரில் மூழ்கி இருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது.
டெல்லியில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8:30 மணி வரை 22.8 செ.மீ மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது 1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாக பார்க்கப்படுகிறது.
கனமழை:
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நேற்று கனமழை பெய்தது. இந்த கனமழையானது இன்று வரை தொடர்ந்தது. இந்த கனமழையானது சுமார் 88 ஆண்டுகளில் அதிகபட்ச மழையாக பார்க்கப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தின்படி, டெல்லியில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8:30 மணி வரை 22.8 செ.மீ மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1936ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 23.55 செ.மீ மழை பதிவானது.
பொதுவாக, ஜூன் மாதத்தில் டெல்லியில் சராசரியாக 8.6 செ.மீ மழை பெய்யும் கருதப்படுகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 22.8 செ.மீ மழைப்பொழிவானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் மழையால், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குறைந்த வெப்பநிலை:
கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெப்ப அலை வீசிய நிலையில், இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 24.7 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதாகவும், இயல்பை விட 3.2 டிகிரி குறைவாக பதிவாகி உள்ளதாகவும் வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழையால், சிக்கிய லாரியின் காட்சிகள்:
#WATCH | A truck submerged as incessant rainfall causes severe waterlogging in parts of Delhi.
— ANI (@ANI) June 28, 2024
(Visuals from Minto Road) pic.twitter.com/1uNpverLee
ஆறுபோல காட்சியளிக்கும் சாலைகள்:
#WATCH | Heavy rainfall causes waterlogging in several parts of Delhi-NCR
— ANI (@ANI) June 28, 2024
(Visuals from Noida Sector 95) pic.twitter.com/eky6UvPYg3
சிரமத்திற்குள்ளாகும் வாகன ஓட்டிகளின் காட்சிகள்
#WATCH | A car submerged in water and roads heavily flooded due to continuous downpour in Delhi
— ANI (@ANI) June 28, 2024
(Visuals from Minto Road) pic.twitter.com/reJQPlzfbQ