515 காலிப் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க... எங்கு தெரியுங்களா?
பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 12.8.25. உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
பாரத் ஹெவி எல்க்ட்ரிக்கல்ஸ் எனப்படும் பெல் நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு நகரங்களில் இயங்கி வருகிறது. திருச்சியிலும் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:
பணி நிறுவனம்: பாரத் ஹெவி எலெட்ரிக்கல்ஸ் லிமிட்டெ (பெல்)
காலி இடங்கள்: 515
பதவி: ஆர்ட்டிசியன்
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள்
வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி பொதுப்பிரிவினருக்கு 27 வயது, ஓ.பி.சி. - 30 வயது, எஸ்.சி./எஸ்.டி - 32 வயது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-8-2025
இணையதள முகவரி: https://careers.bhel.in/. இன்னும் சில நாட்களே இருக்கு. அதனால் உடனே கால தாமதம் இல்லாமல் விண்ணப்பம் செய்து பயன் பெறுங்கள்.
எய்ம்ஸ்-ல் வேலை வாய்ப்பு
எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது.
டெல்லி, பாட்னா உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைந்து இருக்க கூடிய எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'எய்ம்ஸ்', ஜிப்மர், இ.எஸ்.ஐ., உள்ளிட்ட மருத்துவமனைகளில் காலியிடங்கள் உள்ளன.
பணியிடங்கள்: நிர்வாக அதிகாரி, அலுவலக உதவியாளர், கிளார்க், அசிஸ்டென்ட் இன்ஜினியர், எலக்ட்ரீசியன், பார்மசிஸ்ட், கேஷியர், மெக்கானிக், நுாலக உதவியாளர், பிசியோ தெரபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு: வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். அதிகபட்சமாக 43 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 3,000 செலுத்த வேண்டும்: எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2,400 மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 31.7.2025
கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள : https://rrp.aiimsexams.ac.in/. இன்னும் 4 நாட்களே இருக்கு உடனே விண்ணப்பத்தை தட்டி விடுங்க.





















