congress demands apology: “விவசாயிகளுக்கு எதிரான மோடியின் உண்மை முகம் வெளியே வந்துள்ளது”: காங்கிரஸ் சாடல்!
வேண்டிய சகாக்கள் சிலருக்கு மட்டுமே வசதிகளை செய்து தரும் மத்திய அரசு, 60 கோடிக்கும் மேலான விவசாய பெருங்குடிகளுக்கு ஓரவஞ்சனை செய்கிறது - காங்கிரஸ் கட்சி
"விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்?" என்று கேட்டதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் விவசாயிகளுக்கு எதிரான உண்மை முகம் வெளியே வந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, விவசாயிகள் போராட்டாம் குறித்து பிரதமர் மோடி உணர்ச்சியற்ற தன்மையில் பேசியதாக மேகாலயா ஆளுநர் சத்திய மாலிக் தெரிவித்தார். நேற்று ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், "ஒருமுறை மூன்று வேளான சட்டங்களுக்கு எதிராக போராடும் விவாயிகள் குறித்து பிரதமரிடம் பேசினேன். தொடர் போராட்டத்தின் காரணமாக 500க்கும் மேலான விவசாயிகள் மடிந்துள்ளனர் என்று பிரதமரிடம் கூறியபோது, 'அவர்கள் எனக்காகவா செத்தார்கள்?' என்று கேட்டார். அதற்கு நான் 'ஆமாம், நீங்கள் பிரதமராக இருப்பதால் தான் இறந்தார்கள்' என்றேன். பின்னர் அது வாக்குவாதத்தில் முடிந்தது. அதன் பிறகு என்னை அவர் அமித்ஷாவை சென்று பார்க்க சொன்னார். ஒரு நாய் செத்தால் கூட இரங்கல் கடிதம் அனுப்புவார் பிரதமர்" என்று கூறினார்.
700 से ज्यादा किसान आपके लिए न सही, लेकिन आपकी गलती की वजह से जरूर शहीद हुए हैं।
— Congress (@INCIndia) January 3, 2022
சத்திய பால் மாலிக்ன் இந்த சர்ச்சை பேச்சு இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை எற்படுத்தியது. கர்வம், கொடூரம், உணர்ச்சியற்ற தன்மை போன்றவை தான் பிரதமரின் குணங்கள் என்று சத்யபால் மாலிக், மேகாலயா கவர்னர் கூறுவதில் இருந்து தெரிகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.
LIVE: Congress party media byte by Shri @rssurjewala at the AICC HQ. https://t.co/4ukqnhPFMa
— Congress (@INCIndia) January 3, 2022
சத்ய பால் மாலிக் மேலும் கூறுகையில்"இந்த போராட்டம் முற்றிலும் ஓய்ந்தது என்று அரசாங்கம் எண்ண வேண்டாம். அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான். ஏதாவது சிறு விஷயம் தவறாக நிகழ்ந்தால் கூட மீண்டும் போராட்டம் சூடு பிடிக்கும். சென்ற மாதம் கூட ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் 3 வேளாண் சட்டங்களும் கொஞ்சம் காலம் சென்று மீண்டும் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தார். பதுங்கி இருக்கிறோம், பாய்வோம்… ஏனென்றால் விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு", என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்