![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நாட்டின் 15 வது ஜனாதிபதி: 3 ஆண்டுகள் நிறைவு! திரவுபதி முர்முக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து
நாட்டின் 15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
![நாட்டின் 15 வது ஜனாதிபதி: 3 ஆண்டுகள் நிறைவு! திரவுபதி முர்முக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து BJP Tamilisai Soundarrajan congratulates the 15th President of the country Draupathi Murm நாட்டின் 15 வது ஜனாதிபதி: 3 ஆண்டுகள் நிறைவு! திரவுபதி முர்முக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/26ab0ea64d4339814beb4a44d5fc56d71721893086102184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாட்டின் 15 வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்றார். அப்போது அவர் பேசியது..
நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை அடைந்ததை, எனது தனிப்பட்ட சாதனையாக நான் நினைக்கவில்லை. இது, நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களும் அடைந்த சாதனையாகவே கருதுகிறேன்.பல நுாற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டுக் கிடந்த மக்கள் எல்லாம், தற்போது அவர்களது பிரதிபலிப்பாக, அவர்களில் ஒருவராக என்னைப் பார்க்கின்றனர்.
மேலும், எனக்கு மிகுந்த திருப்தி இந்தப் பதவிக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் வாயிலாக, ஒரு விஷயம் நிரூபணம் ஆகியுள்ளது. அதாவது, உயர்ந்த பதவியை அடைய வேண்டுமென, ஏழைகளால் கனவு காண மட்டுமே முடியும் என்ற கருத்து உள்ளது. ஆனால், வெறும் கனவோடு போய்விடாமல் நனவாக்கவும் முடியும் என்பதற்கு என் தேர்வு ஆதாரப்பூர்வமான நிரூபணம்.எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னால், இந்திய அரசியல் அமைப்பின் மிக உயர்ந்த பதவிக்கு வர முடிகிறது.
அது தான் நம் ஜனநாயகத்தின் சக்தி காரணம், எங்களுக்கெல்லாம் பள்ளி படிப்பு கிடைக்குமா என்பதே கூட கனவு தான். இந்த பதவிக்கு வந்துள்ளதன் வாயிலாக, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீது, தனி கவனம் செலுத்துவேன்.
எதிர்காலத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பதோடு, நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைப்பதையும் குறிக்கோளாக கொள்ள, இளைய சமுதாயம் முன்வர வேண்டும். அவர்களுக்கு முழு ஆதரவையும் அளிப்பேன் என்றார்.
நாட்டின் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், ஜனாதிபதியை வாழ்த்தி தமிழிசை தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் நம் இந்திய திருநாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் தனது பணிகளை தொடங்கியிருக்கும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேசமயம் தமிழ்நாடு சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார்; நம் முதல் குடிமகளாக திகழும் மரியாதைக்குரிய திரௌபதி முர்முவின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)