மேலும் அறிய

Indian Army Job : இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு ; எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ? முழு விவரம் உள்ளே !

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு  12.03. 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 10, 2025 அன்று முடிவடையும்!

சென்னை: இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவத்தின் ஆட்சேர்ப்பு அலுவலக சென்னை தலைமையகம் சார்பில் இந்த அறிவிக்கை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்பு

தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள். புதுவை யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள். பெண்கள் ஆகியோர். தங்கள் விண்ணப்பங்களை இந்த இணைய தளத்தின்மூலமாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

அக்னிவீர் பொதுப்பணி, அக்னிவீர் தொழில்நுட்பம். அக்னிவீர் எழுத்தர்/ ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8 ஆம் வகுப்பு தேர்ச்சி), சிப்பாய் நிலையிலான தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் நிலையிலான பார்மா, அக்னிவீர் பொதுப் பணி (ராணுவ மகளிர் காவல்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொதுத்தகுதித்தேர்வு ஆன்லைன் முறையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும்

தேர்வர்கள், அக்னிவீர் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரேநேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுத்தகுதித்தேர்வு ஆன்லைன் முறையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் என்சிசி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இதில் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு  12.03. 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 10, 2025 அன்று முடிவடையும். ஜூன் 2025-ல் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும். அவற்றைப்பெற விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தையும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சளையும் தொடர்ந்து பார்த்துவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) (அஞ்சல் குறியீடு- 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆட்சேர்ப்பு நடைமுறை முழுமையாக தானியங்கி முறையில், நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் நடைபெறுகிறது. ஏதேனும் நபர்கள் விண்ணப்பதாரர்களை அணுகி அவர்களை தேர்ச்சி பெற அல்லது பணியில் சேர உதவ முடியுமென்று கூறினால், அது மோசடியாகும். அத்தகைய நபர்களிடமிருந்து விண்ணப்பதாரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. சொந்த கடின உழைப்பு மற்றும் போட்டி தேர்வுக்கு முறையாக தயாராதல் மட்டுமே அவர்களின் தேர்வை உறுதி செய்யும். இதில் இடைத்தரகர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அத்தகைய இடைத்தரகர்கள், முகவர்கள் அல்லது முகமைகளால் பணிநாடுநர்கள் ஈர்க்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’  யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’ யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
நீட் கலந்தாய்வு; மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களா? இதை கட்டாயம் படிங்க!
நீட் கலந்தாய்வு; மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களா? இதை கட்டாயம் படிங்க!
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? பெட்டிகளில் இருந்த தாள்கள் என்ன? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? பெட்டிகளில் இருந்த தாள்கள் என்ன? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’  யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
'மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ’ யாருடன் உரையாடினார் பாருங்கள்..!
நீட் கலந்தாய்வு; மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களா? இதை கட்டாயம் படிங்க!
நீட் கலந்தாய்வு; மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களா? இதை கட்டாயம் படிங்க!
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? பெட்டிகளில் இருந்த தாள்கள் என்ன? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? பெட்டிகளில் இருந்த தாள்கள் என்ன? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
Karuppu Movie Teaser: சூர்யாவுக்கு கை கொடுக்குமா ‘கருப்பு‘.? பிறந்த நாளில் அதிரிபுதிரியான டீசர் வெளியீடு
சூர்யாவுக்கு கை கொடுக்குமா ‘கருப்பு‘.? பிறந்த நாளில் அதிரிபுதிரியான டீசர் வெளியீடு
Tamilnadu Roundup: முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
Gold Rate Today 23rd July: இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
America Threatens India: ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
Embed widget