ரெட்டைக் கதிரே....! ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மின் அலுவலகத்தில் வேலை கொடுத்த பஞ்சாப் அரசு
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மின் அலுவலகத்தில் பஞ்சாப் மாநில அரசு வேலை கொடுத்து உதவியுள்ளது. வேலை கொடுத்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அந்த இரட்டை சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மின் அலுவலகத்தில் பஞ்சாப் மாநில அரசு வேலை கொடுத்து உதவியுள்ளது. வேலை கொடுத்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அந்த இரட்டை சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் மாற்றான். இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்திருப்பார். அதில் சூர்யாவுக்கு அகிலன் விமலன் என பெயர் வைத்து கதாப்பாத்திரம் வடிமைக்கப்பட்டிருக்கும். இருவரும் எதிரெதிர் திசையில் செயல்படுவார்கள் என கதாப்பாத்திரம் வடிமைக்கப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் குணாதியங்கள் ஒன்றாகவே இருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்து.
அந்த வகையில் டெல்லியில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் இன்று உலகிற்கு தெரியவந்துள்ளனர். அதற்கு காரணம் அவர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு வழங்கிய வேலை. பஞ்சாப்பில், சரண்ஜித் சிங் சன்னி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் தலைமையிலான அரசு இந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு அரசு வேலை கொடுத்து உதவியுள்ளது.
சோஹ்னா மற்றும் மோகனா ஆகிய ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளனர். இரட்டை சகோதரர்கள் இருவரும் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷனில் வேலை கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த வாய்ப்பை வழங்கிய பஞ்சாப் அரசுக்கு சகோதரர்கள் இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இந்த வேலை கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வேலையில் டிசம்பர் 20 ஆம் தேதி சேர்ந்தோம். வாய்ப்பளித்த பஞ்சாப் அரசு மற்றும் எங்களைப் பயிற்றுவித்த பிங்கல்வாரா நிறுவனத்திற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளனர்.
Amritsar | Conjoined twins, Sohna and Mohna, bag a job in the Punjab State Power Corporation Limited (PSPCL)
— ANI (@ANI) December 23, 2021
"We're very glad about the job & have joined on Dec 20. We thank the Punjab govt & the Pingalwara institution, which schooled us, for the opportunity," they say pic.twitter.com/vNieE4jBiJ
19 வயதான சோஹ்னாவுக்கு இந்த வேலை கிடைத்ததாகவும் சோஹ்னா மோகனாவுடன் சேர்ந்து பிஎஸ்பிசிஎல் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் உபகரணங்களை கவனித்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் துணை மின்நிலைய இளைய பொறியாளர் ரவிந்தர் குமார் கூறுகையில், “சோஹ்னாவுக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளது. மோகனா சோஹ்னாவுக்கு மின்சார உபகரணங்களை கவனிப்பதில் உதவுகிறார்கள். இந்த வேலையில் சோஹ்னாவுக்கு நல்ல அனுபவம் உண்டு. அதனால்தான் அவருக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
Sohna-Mohna help us look after the electrical appliances here. Punjab govt has hired them. Sohna got the job & Mohna helps alongside. They have work experience as well: Ravinder Kumar, substation Jr Engineer, PSPCL pic.twitter.com/XEfmUsb4zE
— ANI (@ANI) December 23, 2021
சோஹ்னாவும் மோகனாவும் கடந்த 2003ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி புது டெல்லியில் பிறந்தனர். இருவரும் பிறக்கும்போதே ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக பிறந்தனர். இதனால் சோஹ்னாவும் மோகனாவும் பெற்றோரால் கைவிடப்பட்டு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் விளைவாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கருதியதால் அவர்களைப் பிரிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தனர்.