மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. இன்று 5ம் கட்ட தேர்தல்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அளவிலும், இந்தியா அளவிலும் உலக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
- கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சிவகங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 6.7 செ.மீ மழை பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு.
- தமிழ்நாட்டில் கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக 8 மாவட்டங்களில் உள்ள 2 கோடி செல்போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளன.
- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களுக்கு மே 21, 22ம் தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- உதகை அரசு ரோஜா பூங்காவில் கடந்த மே 10ம் தேதி தொடங்கிய ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- உலகின் உயரமான சிகரமான மவுண்ட் எவரெஸ்ட்டை எட்டிய காவல்துறையைச் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த ப்ரித்தியா யாஷினி படைத்துள்ளார்.
இந்தியா:
- லடாக்கில் அதிகாலை 5.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு.
- மக்களவை தேர்தலில் இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- டெல்லியில் பாஜக அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தும் நிலையில் ஐ.டி.ஓ மெட்ரோ நிலையம் மூடல்.
- தென் மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- பீகார் மாநிலம் பாட்னா அருகே கங்கை நதியில் தொழிலாளர்கள் சென்ற படகு கவிழ்ந்தது.
- மக்களவை தேர்தலை முன்னிட்டு மே மாதத்தில் 17ம் தேதி வரை ரூ. 28, 200 கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் விற்றுள்ளன.
- ஆம் ஆத்மி கட்சியை பாஜக அழிக்க முயற்சி செய்வதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
உலகம்:
- சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. தற்போது வரை அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை
- ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக 50க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்
விளையாட்டு:
- சென்னையில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ரூபே கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தாய்லாந்து ஓபன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ஜோடி வெற்றி பெற்று பட்டம் வென்றது.
- கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் செயல்கள் வீடியோ பதிவு செய்யப்படுவது வேதனை அளிக்கிறது என ரோஹித் சர்மா குற்றச்சாட்டு.
- ஐபிஎல் 2024ன் நேற்றைய கடைசி லீக் போட்டியில் மோத இருந்த கொல்கத்தா - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion