மேலும் அறிய

Coimbatore : குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர், மனைவியுடனான தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர், மனைவியுடனான தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புலனாய்வு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பாலகுமார் (38). இவர் கோவை கணபதி மாநகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி சுமதி, தாஜ் குடும்ப நட்சத்திர உணவகங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பணி உயர்வு கிடைத்திருந்தது. இதையடுத்து பயிற்சிக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்றிருந்தார். இதனால் இவர்களது இரு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள பாலகுமாரின் தந்தை சண்முகத்தின் வீட்டில் விட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் பாலகுமார் ஈடுபட்டிருந்தார். அப்போது செல்போனில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனால் அவர் உறவினர்களின் அழைப்புகளை துண்டித்து வந்துள்ளார். கடந்த 20ம் தேதி வீட்டிற்கு சென்ற பாலகுமார், அதன் பின்னர் பணிக்கு வரவில்லை. அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், இது தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில் நேற்று இரவு சரவணம்பட்டி காவல் துறையினர் பாலகுமார் வசித்து வந்த வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது தெரியவந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாலகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் இறந்து பல மணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
Dindigul Hospital: உயிர்களை பறித்த மருத்துவமனை, 7 பேர் பலி - திண்டுக்கல் மருத்துவமனை விபத்தில் நடந்தது என்ன?
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
இன்று கார்த்திகை தீபம்! மகாதீபத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சிவ கோஷத்தில் திருவண்ணாமலை
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: திண்டுக்கல்லில் 6 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
Chembarambakkam Lake: இன்று திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம்! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
Chembarambakkam Lake: இன்று திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம்! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
Rasipalan December 13: இன்று கார்த்திகை தீபம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்?
Rasipalan December 13: இன்று கார்த்திகை தீபம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Embed widget