மேலும் அறிய

Ola, Uber drivers Strike: 2-வது நாளாக தொடரும் ஓலா, ஊபர் கார் ஓட்டுநர்கள் போராட்டம்! திடீர் கட்டணம் உயர்வு?

Ola,Uber drivers Strike: ஓலா, ஊபர் கார் ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பைக் டாக்ஸி சேவையை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இரண்டவாது நாளாக ஓலா,ஊபர் கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

வேலைநிறுத்த போராட்டம்

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மொபைல் செயலில் மூலம் கார், ஆட்டோ புக் செய்து பயணம் செய்யும் சேவையை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஓலா, ஊபர், போர்டர், ரெட் டாக்ஸி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக கமிஷன் எடுத்து கொள்வதாகவும், குறைந்த ஊதியம் வழங்குவதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதோடு பைக் டாக்ஸி சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் ஓலா, ஊபர் கார் ஓட்டுநர்கள் நேற்று (16.10.2023) முதல் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இன்றும் கார், ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் செயலி மூலம் புக்கிங் எடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். அரசு தலையிட்டு  டாக்ஸி சேவையில் தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

வேலைநிறுத்த எதிரொலி - கூடுதல் கட்டணம் வசூல் 

பல்வேறு நகரங்களில் ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலி மூலம் வாடகை வாகனம் புக் செய்து பயணிப்பது என்று அன்றாடங்களில் ஒன்றாகிவிட்டது. வேலைக்குச் செல்பவர்கள், வெளியூர்களுக்கு சென்றுவிட்டு இரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் இருந்து வீட்டிற்குச் செல்பவர்கள் தொடங்கி இன்னபிற காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்கள் இந்தச் சேவையை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. இப்படி இருக்கையில், வேலைக்கு செல்லும் நபர்கள் வழக்கமாக வீட்டில் இருந்து மெட்ரோ, பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஓலா ஆட்டோ, கார் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இரண்டு நாட்கள் ஓட்டுநர்கள் போராட்டம் அறிவித்திருப்பதால் கடும் அவதிக்குள்ளாகினர். 

வேலைநாளின் முதல் நாளாக திங்கள்கிழமை அலுவலங்களுக்கு செல்பவர்கள் வெகு நேரம் வாகனம் புக் செய்ய முயற்சித்தும் புக் ஆகாமல் சிரமத்திற்குள்ளாகினர். அரசு பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வரும் இடங்களில் இருந்து வேலைக்குச் செல்பவர்கள் அங்கிருந்து நகரத்தின் முக்கிய இடத்திற்கு வருவதற்கு ஓலா சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி இதை நம்பி இருப்பவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் புக்கிங் செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

20 நிமிடங்கள் வரை புக்கிங் செய்ய முயற்சித்தும் எந்த வாகனமும் கிடைக்கவில்லை என அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் தெரிவித்துள்ளார். கார் இல்லையென்றாலும் ஆட்டோவில் செல்லலாம் என்றாலும் இந்த சமயத்தில் அவர்களும் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் பலர் தெரிவித்தனர். மற்றொருவர் ஒரு மணி நேரம் கார் புக் செய்ய முயற்சி செய்து கிடைக்காததால் அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோவை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆட்டோவிற்கு அதிக கட்டணம் கொடுத்து பயணித்த வருத்தத்தை அவர் தெரிவிக்கிறார். கார் ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் மற்ற ஆட்டோ, ஓலா, ஊபர் புக் செய்யும் ஆட்டோ சேவைக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது சரியானதல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சூழலை பயன்படுத்தி லாபம் பார்க்க நினைப்பது முறையா என்று மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இன்றும் டாக்ஸி சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக குறைவான வாகனங்களே இயங்கி வருவதால் வழக்கத்தைவிட கூடுதலாக ரூ.50 முதல் ரூ.120 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

அனைத்திந்திய சாலை போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் (The All India Road Transport Workers Federation),தமிழ்நாடு உரிமை குரல் ஓட்டுநர் மற்றும் வணிக ஊழியர்கள் ஒன்றியம்  (Tamil Nadu Urimai Kural Driver Trade Union jointly) ஆகியவை இணைந்து நடத்தும் போராட்டம் கோரிக்கை நிறைவேற்றும் வரை தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதோடு நாளை ( 18-ம் தேதி ) மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Embed widget