Breaking News LIVE: இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
Breaking News LIVE:அரிவாளால் வெட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்(56) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Breaking News LIVE:செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் செயற்கை முறையில் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப் பட்ட ஏழு டன் மாம்பழங்கள் உணவு சுகாதாரத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது
Breaking News LIVE:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்திய அணி அறிவிப்பு
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இல் விளையாடப்போகும் இந்திய அணியின் இறுதிப் பட்டியலை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது
Breaking News LIVE: தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலரை வெட்டிய மர்ம நபர்கள்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலருக்கு வெட்டு.வெட்டிய மர்ம நபர்களை போலீஸ் தேடிவருகிறது.
Breaking News LIVE:12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்த பின் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

