40 வயசை தொட்டுட்டீங்களா? உங்க ஃபிட்னஸுக்கு அடிப்படை மந்திரம் மாதிரி ஃபாலோ பண்ணவேண்டியது இதுதான்..
நீங்கள் உங்களின் 40 வயதைத் தொட்ட பிறகும், ஃபிட்டாக இருப்பது எப்படி என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே வழங்கியுள்ளோம்..
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு வயது தடையாக இருக்க முடியாது. நமது வயது கூடும் போது, நமது உடல்களும் மாற்றம் அடைகின்றன. எனவே புத்திசாலித்தனமான, அதே வேளையில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய உடற்பயிற்சிகளும், நம் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றுவதும் நமது ஃபிட்னெஸ் இலக்குகளை அடைய உதவும். மேலும், நீங்கள் உங்களின் 40 வயதைத் தொட்ட பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்பு எளிதாக உங்களால் செய்ய முடிந்த உடற்பயிற்சிகளைச் செய்வது கடினமாக மாறியிருப்பதை உணர முடியும்.
40 வயதுக்குப் பிறகும், ஃபிட்டாக இருப்பது எப்படி என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே வழங்கியுள்ளோம்...
1. உடலின் நெகிழ்வுத்தன்மை மீது கவனம் கொள்ளவும்
உடற்பயிற்சிக்கு முன் உடலை வளைத்து மேற்கொள்ளப்படும் வார்ம் அப் பயிற்சிகளின் மூலம் உடலின் நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது. எனவே தசைகளில் காயம் ஏற்படாமல் இருக்க, உடற்பயிற்சி செய்து முடித்து 10 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு ஸ்ட்ரெட்சிங் எனப்படும் வளைவு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. உங்கள் வரம்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
இளைஞர்கள் எடைகளைத் தூக்குவதைப் பார்க்கும் போது, அதனை நாமும் பின்பற்றலாம் என்று தோன்றுவது மிக இயல்பானது. எனினும், அது உங்களுக்கு ஆபத்தானதாக அமையலாம். நடமாட்டத்தைக் கருத்தில் கொண்ட உடற்பயிற்சிகளையும், குறைந்த, நடுத்தர எடைகளைத் தூக்குவது, நீச்சல், யோகா முதலானவற்றை 40 வயதைக் கடந்தவர்கள் மேற்கொள்ளலாம்.
3. டயட் மீது கவனம் கொள்ளவும்
ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக உடலுக்கு உணவு அளிக்காமல் வருத்தக் கூடாது. ஏனெனில் உங்கள் 20 வயதுகளில் இருந்ததைப் போல, உடல் தற்போது இயங்காது. எனவே போதுமான உணவு, காய்கறிகள், தானியங்கள், பழங்கள் முதலானவற்றை சாப்பிட வேண்டும். மேலும், ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை உங்கள் உடலுக்கு வழங்குகிறீர்களா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளவும்.
4. வார்ம் அப் செய்ய மறக்க வேண்டாம்!
நாம் வயது ஆக ஆக நமது தசைகள் மேலும் இருக்கம் அடைவதோடு, எளிதில் காயமடைய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எனவே வார்ம் அப் பயிற்சிகளின் மீது கவனம் செலுத்தி, அவற்றைத் தொடர்ந்து உடற்பயிற்சிகளைப் போலவே மேற்கொள்ள வேண்டும். எனினும், வார்ம் அப் பயிற்சிகள் சிறியதாகவும், அதிகளவில் உடல் சோர்வை அளிக்காத விதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )