"Thala for a reason" Trending: "தல ஃபார் எ ரீசன்"; அரையிறுதிப் போட்டியில் ஜெயிச்சதுக்கே தோனி தான் காரணமாம்; ட்ரெண்டாகும் ‘7‘
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் நேற்று இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், அதற்கு காரணமே தல தோனிதான் எனக் கூறி, அவரது ரசிகர்கள் ‘7‘-ஐ மையமாக வைத்து காரணங்களை அடுக்கி உள்ளனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் நேற்று இங்கிலாந்துடன் மோதிய இந்திய அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தை, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் சென்று பார்த்தார். இதைத் தொடர்ந்து, இந்த வெற்றிக்கே அவர் தான் காரணம் எனக் கூறும் ரசிகர்கள், அவரது ஜெர்சி நம்பரான ‘7‘-ஐ மையமாக வைத்து, இந்திய அணியின் வெற்றிக்கான காரணங்களை அடுக்கி தெறிக்க விட்டுள்ளனர். அவை என்னென்ன.? பார்க்கலாம்.
“தல ஃபார் எ ரீசன்“ எனக் கூறி ‘7‘-ஐ ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பது தெரிந்த விஷயம். ரசிகர்கள் என்று சொல்வதைவிட வெறியர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் மீது அன்பு வைத்துள்ள அவரது ரசிகர்கள், கிரிக்கெட்டில் 7 என்ற எண் வரும்போதெல்லாம் அதனை தோனியுடன் ஒப்பிட்டு, "Thala for a reason" என மீம்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அது போதாதா, உடனே தோனி ரசிகர்கள், அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கே தல தோனி தான் காரணம் என்றே கூறிவிட்டனர். அதோடு நிற்காமல், அந்த போட்டியில், ‘7‘-ம் எண் தொடர்புள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டு, அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
ரசிகர்கள் குறிப்பிட்டுள்ள ஒற்றுமைகள் என்னென்ன.?
இந்தியா 7 ரன்களில் வெற்றிபெற்றது மட்டுமின்றி, அந்த போட்டியில் பல்வேறு ஆச்சரியமான ஒற்றுமைகள் 7 என்ற எண்ணைச் சுற்றியே அமைந்துள்ளன. அது குறித்து ரசிகர்கள் பட்டியலிட்டுள்ள ஒற்றுமைகள் இவை தான்...
- இந்திய அணியின் வெற்றி வித்தியாசம்: 7 ரன்கள்.
- இந்திய அணி இழந்த விக்கெட்டுகள்: 7.
- இங்கிலாந்து அணி இழந்த விக்கெட்டுகள்: 7.
- ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸர்கள்: 7.
- இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் அடித்த சிக்ஸர்கள்: 7.
- இந்திய வீரர் அபிஷேக் சர்மா சந்தித்த பந்துகள் 7.
- இந்திய வீரர் திலக் வர்மா சந்தித்த பந்துகள்: 7.
- இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் எடுத்த ரன்கள்: 7.
- இங்கிலாந்து வீரர் சால்ட் ஆட்டமிழந்தது அந்த இன்னிங்ஸின் 7-வது பந்து.

இப்படி அடுக்கடுக்கான ஒன்றுமைகளை கூறி, இந்திய அணியின் வெற்றிக்கே ‘தல‘ தோனி தான் காரணம் என அவரது ரசிகர்கள் அங்கலாய்த்து வருகின்றனர். போதாததற்கு, வான்கடே மைதானத்திற்கு தோனியே நேரில் வந்து போட்டியை கண்டுகளித்ததால், அவரது ரசிகர்கள், போட்டியில் வெற்றி பெற்றதற்கு அவர் தான் கரணம் என அடித்துச் சொல்லி, ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















