Corn Pakoda: மொறு, மொறு சோள பக்கோடா! ஈசியா செய்யலாம் - செய்முறை இதோ!
சுவையான சோளம் பக்கோடா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
மாலை நேரத்தில் டீ உடன் சாப்பிட வழக்கமான போண்டா வடை போன்றவைகள் போரடித்து விட்டதா? புதியதாக ஏதேனும் ஸ்நாக் சுவைக்க விரும்புகிறீர்களா? அப்போ இந்த சோள பக்கோடாவை முயற்சி செய்து பாருங்க. மொறு மொறுவென சுவை சூப்பராக இருக்கும். வாங்க இந்த பக்கோடாவை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஸ்வீட் சோளம் - 1 (வேகவைத்தது)
வெங்காயம் - 2 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
கறிவேப்பிலை நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
தண்ணீர் -தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1 கப் (கால் கிலோ)
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் சோளத்தை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒவ்வொரு முத்துக்களாக பிரித்தெடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
பின்னர் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை இதனுடன் சேர்த்து கலந்துவிடவும்.
இதனுடன் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து, கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தயார் செய்த மாவை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பக்கோடா தயார்.
மேலும் படிக்க
Vijayakanth Funeral : விஜயகாந்த் இறுதி சடங்கு.. பொது மக்களுக்கு அனுமதி இல்லை: தேமுதிக அறிவிப்பு..