Vijayakanth Funeral LIVE: மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்
Vijayakanth Funeral LIVE Updates: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதுகுறித்த அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
LIVE
Background
Vijayakanth Funeral LIVE Updates:
தேமுதிக தலைவர் விஜயகாந்த்(Vijayakanth), கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றும் வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் உடல்நிலைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவ தொடங்கியது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தைப் போக மியாட் மருத்துவமனை, தேமுதிக தலைமைக்கழகம் ஆகியவை விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தனர்.
தொடர்ந்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின் நேற்று முழுவதும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து குவியும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, தீவுத்திடல் மைதானத்துக்கு விஜயகாந்த் உடல் மாற்றப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது,
மனிதநேயமும் துணிச்சலும் என்றென்றும் குடிகொண்டிருக்கும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய திருவுடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினோம்.
— Udhay (@Udhaystalin) December 29, 2023
முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க… pic.twitter.com/o84RHSUOBg
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...#CaptainVijayakanth pic.twitter.com/DaBkTcuR6n
— M.K.Stalin (@mkstalin) December 29, 2023
Vijayakanth Funeral : மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்
மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்
விஜயகாந்த் குடும்பத்தினர் சார்ப்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன
விஜயகாந்த் குடும்பத்தினர் சார்ப்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன