சாதம் மீதமாகிடுச்சா? கவலையே வேண்டாம்! டக்குன்னு செய்ய 4 ரெசிப்பி இதோ!
என்னதான் தண்ணீர் ஊற்றி பழைய சாதம் ஆக்கி, அதை உண்டுவிடலாம் என்று நாம் நினைத்தாலும், குப்பைத்தொட்டியில் கொட்டுவதற்கு மீந்த சாதம் எப்போதும் இருக்கிறது
மீதமான உணவுகள் வீட்டின் பெரிய சாபம். மீதமான சாதம் அதை விடக் கொடுமை. என்னதான் தண்ணீர் ஊற்றி பழைய சாதம் ஆக்கி, அதை உண்டுவிடலாம் என்று நாம் நினைத்தாலும், குப்பைத்தொட்டியில் கொட்டுவதற்கு மீந்த சாதம் எப்போதும் இருக்கிறது. மீந்து போகும் சாதத்தில் செய்வதற்கான சுவையான உணவுகள் இங்கே.
கீர்
பாலை சற்று சுண்டவிட்டு, அதில் மீந்திருக்கும் சாதத்தை இட்டு, பின்பு போதுமான அளவு சர்க்கரை சேர்த்தால் இந்த சுவையான கீர் ரெடி. சிறிது ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து பருகலாம். பாயசம் போல சுவையாக இருக்கும்.
அரிசி பகோடா
மாலை நேரத்தில், தேநீருடன் சாப்பிட யாருக்குத்தான் பகோடா வேண்டாம்? மீந்திருக்கும் சாதத்தில் பகோடா செய்ய, உங்களுக்குத் தேவையானவை சிறிது பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி இலைகள் மற்றும் கடலை மாவு. சிறிது உப்பு, மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்து, இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மாவு ரெடி. இவற்றை தட்டி, எண்ணெயில் சுட்டு எடுத்தால் சுவையான அரிசி பக்கோடா தயார்.
ஃரைட் ரைஸ்
இந்த உணவு யாருக்குதான் பிடிக்காது? சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை நறுக்கி சிறிது நேரம் அதே சட்டியில் வதக்கி எடுத்து, பின்பு சிறிது சோய் சாஸ், ரெட் சில்லி சாஸ், சிறிது தக்காளி சாஸ், வினிகர், உப்பு சேர்த்து நன்கு கலந்து, இவற்றுடன் மீதமிருக்கும் சாதத்தை கலந்து அடுப்பிலிருந்து இறக்கினால், சூடான ஃரைட் ரைஸ் தயார்.
அரிசி பராத்தா
மீதமிருக்கும் சாதத்தில் தேவைப்படும் மசாலா இட்டு, அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கைப் போட்டு மசித்து, சப்பாத்தி மாவில் இவற்றை பொதிந்து தோசைக்கல்லில் போட்டு வேகவைத்து பிரட்டி எடுத்தால், சுவையான அரிசி பராத்தா ரெடி.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்