மேலும் அறிய

செலவே இல்லாம உடம்பை குறைக்கணுமா? மாவுச்சத்துக்கு எளிய, எகனாமிக் மாற்று என்ன? மருத்துவர் டிப்ஸ்

எகனாமிக்கா மாவுச்சத்து உட்கொள்ளலை குறைச்சு, ஆரோக்கியமா வாழ எளிய வழி! டாக்டர் ஃபரூக் அப்துல்லா வழிகாட்டல்!

எகனாமிக்கா, ரொம்ப காசு செலவு இல்லாம நானும் மாவுச்சத்த குறைச்சு சாப்டணும்னு விரும்புறேன்.. என்ன பண்ணனும்? இதற்கு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எளிமையாக வழிகாட்டி உள்ளார்.

காலைல எழுந்து குடிக்கிற  டீ / காபிய நிறுத்த முடியுமானு பாருங்க. முடியலையா  லெமன் டீ/ கடுங்காப்பி / வரட்டீனு இனிப்பு இல்லாம குடிங்க.

அதுவும் முடியலையா 100 மில்லி பால் டீ காபில எந்த வகைலையும் இனிப்பு சேர்க்காதீங்க ( சீனி / நாட்டு சர்க்கரை / வெல்லம்/ கருப்பட்டி / தேன் / ஸ்டீவியா / சுகர் ஃப்ரீ எதையும் சேர்க்காதீங்க)

காலை சாப்பாடா

நாலு இட்லி அல்லது மூனு தோசை இதை நிறுத்திட்டு நூறு கிராம் அவிச்ச அல்லது வறுத்த நிலக்கடலை சாப்டுங்க. வறுக்குறது மணல்ல வறுங்க அவிச்சு சாப்புடறது ரெகமெண்டட்.

இதன் மூலமா காலைல  சாப்புடற 50-100 கிராம் மாவுச்சத்து உள்ள போகாம, அதை 20 கிராமுக்கும் கம்மியா குறைச்சுட்டோம். கூடவே சத்தான புரதமும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும் கிடைக்குது. புரதமும் கொழுப்பும் மனசையும் வயிறையும் சேர்த்தே நிரப்பும் என்பதால் திருப்தி ஏற்பட்டு மீண்டும் மூன்று முதல் நான்கு மணிநேரங்களுக்கு பசி எடுக்காது.

லோ கார்ப் நண்பன் - வெள்ளரிக்காய்

மீறி பசி எடுத்தால் இருக்கவே இருக்கு, லோ கார்ப் நண்பன் - வெள்ளரிக்காய். ரொம்ப பெருசும் இல்லாம, சிறுசும் இல்லாம ரொம்ப எளசும் இல்லாம, முத்தலும் இல்லாம, ஒரு வெள்ளரிப் பிஞ்ச சாப்டுங்க. கூட ஒரு லெமன் டீ இனிப்பில்லாம அடிங்க....

மதியம் எப்படி?

மதிய சாப்பாடு நேரத்துல இப்ப சாப்புடுற சோத்தோட அளவ மூன்று பங்கா போட்டுக்குங்க, அதுல ஒரு பங்க சாப்டுங்க சாப்டாம விட்ட மிச்ச இரண்டு பங்குல ஒரு பங்கு அளவு  காய்கறிகளை சாப்டுங்க.

இன்னொரு பங்கு அளவுக்கு ஈடாக  ரெண்டு முட்டைகளை உங்களுக்கு புடிச்ச மாதிரி ஆம்லெட் / ஆஃப் பாயில் / டபுள் சைடு / அவிச்சது/ பொடி மாஸ்னு எப்டி வேணாலும் சாப்டுங்க. இப்ப மதியம் உள்ள போக இருந்த மாவுச்சத்து அளவுகள்ல பெரும்பகுதிய குறைச்சுட்டீங்க.

கூடவே காய்கறிகள் மூலம் நார்ச்சத்தும் முட்டைகள் வழி புரதமும் வைட்டமின்களும் நல்ல கொழுப்பும் கிடைக்கிறது. சமைப்பதற்கு தேங்காய் எண்ணெய், நெய் போன்றவற்றை உபயோகிப்பது சிறந்தது. அளவுடன் உபயோகியுங்கள், வரம்பு மீறாதீர்கள்.


செலவே இல்லாம உடம்பை குறைக்கணுமா? மாவுச்சத்துக்கு எளிய, எகனாமிக் மாற்று என்ன? மருத்துவர் டிப்ஸ்

அடுத்து மாலை நேரம்

100 மில்லி பால், டீ இனிப்பு ஏதும் இல்லாமல் பருகுங்கள்.  கூடவே யாரும் அதுவரை கொய்யாத கொய்யா காயைப் பறித்து பல்லுக்கு பங்கம் வராமல் உண்ணுங்கள்.

இரவு உணவு

நான்கு தோசைகள் உண்ணும் இடத்தில் அதை இரண்டாகக் குறைத்து விட்டு  அதற்கு ஈடாக பச்சை பட்டானி / காளிபிளவர் / காளான் / கோழி / மீன்/ பனீர் போன்றவற்றை நூறு கிராம் சேர்த்துக் கொள்ளலாம்.

எதுவும் இல்லையா? இரண்டு தோசைகளுடன் ஒரு டபுள் ஆம்லெட் சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். எட்டு மணிக்குள் இரவு உணவை முடிக்க முயற்சி செய்யுங்கள்.

காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும் வரை இருக்கும் பல மணிநேரங்களில் ஏதேனும் ஒரு மணிநேரத்தை தொடர்ந்து நடை பயிற்சிக்கு செலவிடுங்கள். காலை வெறும் வயிற்றிலும் நடக்கலாம், இரவு உணவுக்குப் பிறகும் நடக்கலாம்.

உறக்கம்

உறக்கம் - குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மணிநேரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கண்ணுக்கும் மனதுக்கும் அதிக அழுத்தம் தரும் பணிகள் என்றால் எட்டு மணிநேர உறக்கம் அவசியம்.

தண்ணீர் - மூன்று லிட்டர் முதல் நான்கு லிட்டர் பருகவும். காலை உணவை டீ/ காபி உட்பட எட்டு மணிக்கு மேல் சாப்பிட்டு இரவு உணவை எட்டு மணிக்குள் முடித்து விடுங்கள். காலை உணவை லேட்டாக்குவதும் இரவு உணவில் விரைவு காட்டுவதும் நல்ல யுக்தி.

மாவுச்சத்தைக் குறைத்து புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தை உண்பது என்பது அனைவராலும் முடிந்த ஒன்று என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்; அசால்ட்டா இருக்காதீங்க என சுகாதாரத் துறை எச்சரிக்கை
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!
தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
எந்த ஆல்கஹால் கல்லீரலைப் பாதிக்காது, போதையின் சரியான அளவு என்ன? - நிபுணர்கள் கூறும் உண்மை!
எந்த ஆல்கஹால் கல்லீரலைப் பாதிக்காது, போதையின் சரியான அளவு என்ன? - நிபுணர்கள் கூறும் உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget