மேலும் அறிய
மதுரையில் கூலித் தொழிலாளர்களுக்காக டாக்டர் சரவணன் தொடங்கிய 10.ரூ விலை உணவகம்! 10 ரூபாயில் உணவு!
10 ரூபாய்க்கு 4 இட்லி அல்லது 3 இட்லி 1 டீ என விலை மலிவாக உணவு வழங்கப்படுகின்றது - டாக்டர் சரவணன்.

டாக்டர் சரவணன்
Source : whatsapp
மதுரையில் கூலி தொழிலாளர்களுக்காக சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் சரவணா கிச்சன் எனும் நடமாடும் மலிவு விலை உணவகத்தை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.
10.ரூபாய்க்கு மதுரையில் மலிவு விலை உணவகம்
சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து மதுரை சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பா.சரவணன் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் நடிகர்கள் மதுரை முத்து, கஞ்சா கருப்பு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு மலிவு உணவுகளை டாக்டர் சரவணன் வழங்கினார்கள்.
மலிவு விலை உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
நாள்தோறும் நடமாடும் மலிவு விலை உணவகம் மதுரை நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்று மலிவு விலை உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பா.சரவணன் அளித்த பேட்டியில் "கூலி தொழிலாளர்களுக்காக மலிவு விலை உணவகத்தை தொடங்கி இருக்கிறோம். 10 ரூபாய்க்கு 4 இட்லி அல்லது 3 இட்லி 1 டீ என விலை மலிவாக உணவு வழங்கப்படுகின்றது. என் குடும்பம் உணவுக்காக பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளது, உணவின் அருமை எனக்கு தெரியும். அதனால் தொழிலாளர்களுக்காக இந்த மலிவு விலை உணவகத்தை தொடங்கி இருக்கிறேன், முதல் கட்டமாக தொழிலாளர்கள் கூடுமிடங்களில் காலை உணவு வழங்கப்படுகின்றது. தொழிலாளர்களின் வரவேற்பை அடுத்து மாலை நேரங்களில் உணவகத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்" என கூறினார்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















