Walk in Interview: 10-வது தேர்ச்சி பெற்றவரா? விமான நிலையத்தில் வேலை - நேர்முகத் தேர்வு எப்போது? முழு விவரம்
Walk in INterview: AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் தேதி குறித்த விவரத்தை இங்கே காணலாம்.
AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AI AIRPORT SERVICES LIMITED) நிறுவனத்தில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களுக்கு Fixed Term Contract basis முறையில் நிரப்பப்படுவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Utility Agent Cum Ramp Driver -130
Handyman/ Handywoman -292
சென்னை விமான நிலையத்தில் உள்ள பணியிடங்கள் இந்த அறிவிப்பும் மூலம் நிரப்பப்பட உள்ளது.
கல்வித்தகுதி:
ஓட்டுநர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Handyman/ Handywoman: ரூ. 24,960/-
Utility Agent Cum Ramp Driver - ரூ.22,530/-
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiasl.in/- என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Office of the HRD Department,
AI Unity Complex,
Pallavaram Cantonment,
Chennai -600043
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்
Utility Agent Cum Ramp Driver: 02.05.2024
Handyman : 04.05.2024
விண்ணப்பக் கட்டணம்: நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய்க்கு ( payable at Mumbai) AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் Demand Draft எடுக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.