Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
![Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/01/2aa3e3d5d8f2724e497cd9f6304489f0_original.jpg)
Background
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் RTPCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது
தமிழ்நாட்டில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 26 பேர் உயிரிழப்பு!
கேரளாவில் இன்று 20,728 பேருக்கு கொரோனா
கேரளாவில் இன்று புதிதாக 20,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17,792 பேர் குணமடைந்த நிலையில் ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் நாளை முதல் கடைகள் திறக்க கட்டுப்பாடு
கோவையில் நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி. முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் ஞாயிற்றுக்கிழமையில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிடலாம்; இரவு 9 மணி வரை பார்சல் சேவை வழங்கப்படும் - கோவை ஆட்சியர்
Keral Covid-19 Cases Increasing: கேரளாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது
கேரளாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 20772 தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோய்த் தொற்று விகிதம் (Positivity rate) 13.5 சதவீதமாக உள்ளது என்றும் கேரள சுகாதாரத்துறை கூறியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 160826 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கேரளாவில் நேற்றும், இன்றும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுக்க 6 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அம்மாநிலத்திற்கு முன்னதாக அனுப்பியது.
RT-PCR Test mandatory: கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம்
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காண்பித்தும் தமிழகத்திற்குள் வரலாம்.
ரயில் பயனாளிகளுக்கும் இது பொருந்தும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)