காமெடி என்கிற பேரில் எல்லை மீறிய விஜே சித்து...வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
பிரபல யூடியூபர் வி.ஜே சித்து சமீபத்தில் வெளியிட்ட வீடியோ மக்களிடம் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் நிலையில் விஜே சித்துவை நெட்டிசன்ஸ் கடுமையாக தாக்கி வருகிறார்கள்

வி.ஜே சித்து
தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் விஜே சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய விஜே சித்து தற்போது சித்து வ்ளாக்ஸ் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்று தனது குழுவுடன் சித்து வெளியிடும் வீடியோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இதுதவிர்த்து சித்துவின் மொட்டை மாடி வித் சித்து நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். வி.ஜே சித்து சமீபத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் நிறைய எதிர்ப்புகளை பெற்று வருகிறது
காமெடி என்கிற பேரில் எல்லை மீறிய சித்து
வி.ஜே சித்துவின் நிறைய வீடியோக்களில் காமெடி செய்கிறேன் என்று தன் பக்கத்தில் இருப்பவர்களை அடிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோவில் அவர் ஒருவரை அடித்து மிதித்து காமெடி செய்தது பலரை கடுப்பாக்கியுள்ளது. காமெடி என்கிற பெயரில் சித்து எல்லை மீறிப் போவதாக பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். Worstடா டேய். காமெடின்ற பேர்ல எல்லை மீறி போயிட்டு இருக்கான் vj siddhu🤦♀️ pic.twitter.com/IpeIJbRiZT
— Filmgasm🎬🧢 (@Nithya_vin) February 8, 2025
மேலும் பலர் வி.ஜே சித்துவின் வீடியோக்கள் எப்போதுமே ஒரு விதமான ஒவ்வாமையை கொடுத்து வந்ததாகவும் இப்போதாவது இதுபற்றி பேசுகிறார்களே என தனது ஆதங்கத்தையும் பலர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Never liked Vj Siddhu's vlogs from the beginning.was getting negative vibes.instead of simply making memes and making fun ,people should take a conscious decision to bring cancel culture and recognize only deserving creators instead of ppl like #vjsiddhu @YouTubeIndia
— Vikram (@jazzvik) February 9, 2025
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

