கான்ஸ்பிரேஸி பரப்புகிறாரா ? மனநலம் பாதிக்கப்பட்டவரா ? பாடகி சுசித்ரா ஏன் ஒதுக்கப்படுகிறார்
பாடகி சுசித்ரா தொடர்ச்சியாக சர்ச்சையான கருத்துக்களை சொல்வது கவனமீர்க்கவா , அல்லது அவர் மன நல பிரச்சனைகளை எதிர்கொள்கிறாரா ?

சமீபத்தில் மாநகரம் நடிகர் ஶ்ரீ உடல் மெலிந்த நிலையில் அடையாளமே தெரியாமல் வீடியோ வெளியிட்டது பெரியளவில் பேசுபொருளானது. ஶ்ரீ இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவகாக உரையாடலை ஏற்படுத்தியது. ஶ்ரீயின் நிலைமைக்கு அவர் சார்ந்திருந்த திரைத்துறை தான் காரணமா என்கிற கேள்வியை பலர் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து ஶ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அவரை கண்டுபிடித்து கன்காணித்து வருகிறார்கள். பின் ஏன் தொடர்ச்சியாக சர்ச்சைக் குரிய கருத்துக்களை பேசி வரும் பாடகி சுசித்ரா ஒரு கேலிக்கைக் குரிய நபராக மட்டுமே நம்மால் கருதப்படுகிறார் ?
யார் இந்த பாடகி சுசித்ரா
சென்னையில் பிறந்து, வளர்ந்து ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜேவாக கரியரைத் தொடங்கியவர் சுசித்ரா. லேசா லேசா படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் பாட வைத்தார். அடுத்தடுத்து பாடகராக அதிகம் பிரபலமானார், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்திருக்கிறார். பாரதியார் கவிதைகளை வைத்து இவர் பாடிய ஆல்பம் சுசித்ராவின் குரலுக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. கிராபிக் நாவல் எழுதியிருக்கிறார்.
2016 ஆம் ஆண்டு சுசித்ராவின் எக்ஸ் கணக்கில் இருந்து சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியாகின. சுசித்ராவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சினிமாவில் முன்னணி நடிகர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி வருகிறார். ஆர்த்தி ரவி மோகன் விவாகரத்து குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசினார் . இதற்கு அர்த்தியின் தந்தை சுசித்ரா மீது குற்றப் பிரிவில் புகாரளித்துள்ளார்.
இன்னொரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுத் தளத்தில் பேசும் சுசித்ராவுக்கு சமூக வலைதளத்தில் பெரியளவில் ஆதரவும் இருந்து வருகிறது. சுசித்ராவுக்கு இதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன ? இந்த சர்ச்சை தவிர்த்து தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிக சுவாரஸ்யமான வாழ்க்கையைக் கொண்டவர். சுச்சி லீக்ஸ் சர்ச்சைக்குப் பின் லண்டனில் சமையல் கலை பற்றி படித்து வந்திருக்கிறார் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் , வெளியே வந்து கமலைப் பற்றி சர்ச்சையாக பேசினார். சினிமாத் துறையைப் பற்றி தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதமாக அவர் பேசி வருவதன் நோக்கம் என்ன. அவர் தன்னுடைய சக திரைத்துறையினால் பாதிக்கப்பட்டாரா ? பெண்ணியவாதிகள் தரப்பினரால் சுசித்ரா ஒரு உயர் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதியாக மட்டுமே கருதப்படுகிறார். அவர் பேசுவது சரியா தவறா என்கிற உண்மைகளை சினிமாத் துறை சார்ந்து ஏன் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. சுசித்ராவைப் பற்றிய செய்தி போட்டால் வியூஸ் வரும் என்பதால் மீடியாக்கள் ஏன் அவரை ஊக்குவிக்கின்றன. சுசித்ரா மன நல சிகிச்சையில் இருந்தவர் என அவரது தங்கை ஒரு முறை சொல்லியிருக்கிறார். அப்படி அவர் மன நல பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறார் என்றால் அவரது கருத்துக்களை செய்திகளை வெளியிடுவதில் என்ன பொருள் இருக்கிறது ? அவரை குணப்படுத்துவது அவர் சார்ந்த அதே சினிமாத் துறையினரின் பொறுப்பில்லையா? அவரை கைது செய்து சிறையில் வைப்பதால் இந்த பிரச்சனை சரியாகிவிடுமா ? அவரது நண்பர்கள் அவருக்கு உதவினார்களா ? தெரிந்தோ தெரியாமலோ ஒரு கேலிக்குரியவராக மட்டுமே பொதுவெளியில் பார்க்கப்படுகிறார் சுசித்ரா.





















