LEO Update: கொந்தளித்து பூட்டை போட்ட விஜய் ரசிகர்கள்....! அப்டேட்டையே அப்டேட்டாக கொடுத்த லியோ டீம்! 4 நாளும் சரவெடிதான்!
லியோ படத்தின் அப்டேட்கள் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:
இதுதொடர்பாக லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு லியோ படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும். முதற்கட்டமாக லியோ படத்தின் தெலுகு போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
He is back 🔥
— Seven Screen Studio (@7screenstudio) September 17, 2023
Annan ready, Poster adi 💣#LeoPosterFeast for the next 4 days, starting today..#LeoTeluguPoster is releasing Today at 6PM 🕕#Leo https://t.co/51VhAefl9c pic.twitter.com/GqDVjfgATy
சாதித்த ரசிகர்கள்:
இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆகஸ்ட் 9ம் தேதிக்குப் பிறகு லியோ படத்தின் அப்டேட் தொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் அறிவிப்பு இதுதான். விஜய் - லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோரது கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 19ம் தேதியாகியுள்ளது. ஒரு மாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளிவராமலேயே இருந்தது. இதனால் தயாரிப்பு நிறுவனத்தை விமர்சிக்க தொடங்கிய விஜய் ரசிகர்கள், பூட்டு போட்டுக்கோங்க என்ற ஹேஷ்டேக்கையும் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் தான், லியோ படத்தின் போஸ்டர் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ந்து வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நட்சத்திர பட்டாளம்:
விஜய் நாயகனாக நடிக்கும் லியோ படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், இயக்குநர்கள் கெளதம் மேனன் என பல்வேறு மொழியை சேர்ந்த பிரபலங்களும் நடித்துள்ளனர். இதனால், பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள லியோ, விஜய்ன் முந்தைய பட வியாபாரத்த முறியடித்துள்ளது. அதன் காரணமாக, பெரும் வசூலை ஈட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான அப்டேட்டுகள்
லியோ படத்தின் முதல் அப்டேட் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று வெளியானது. அதன்படி அன்றைய தினம் 2 போஸ்டர்கள், விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சஞ்சய் தத் பிறந்தநாளன்று அவரின் ஆண்டனி தாஸ் கேரக்டரும், அர்ஜூன் பிறந்தநாளன்று அவரின் ஹரோல்ட் தாஸ் கேரக்டரும் வெளியானது. இந்நிலையில் லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.