மேலும் அறிய
Vijay GOAT Story: மிரட்ட வரும் ஏலியன்ஸ் - விஜய் நடிக்கும் GOAT படத்தின் கதை வெளியானது!
Vijay GOAT Story: விஜய் நடிக்கும் GOAT படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.

விஜய் நடிக்கும் GOAT படம்
Vijay GOAT Story: விஜய் நடிக்கும் GOAT படத்தின் ஒன்லைன் கதை குறித்து வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்கள் லியோ படத்தை திருவிழாவாக கொண்டாடி ரசித்தனர். லியோ படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.600 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது. லியோ படம் உருவாகி வந்தபோது விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்து வருகின்றனர். படத்தை கல்பாத்தி அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்திற்கு சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலுடன் விஜய் டபுள் ஆக்ஷனில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தளபதி 68 படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர உள்ளார் என இணையத்தில் பரவியது. இந்த நிலையில் விஜய் நடிக்கும் GOAT படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசியுள்ள வெங்கட்பிரபு, “இளைய தளபதி போன்ற ஒரு ஹீரோவை ஏலியன்ஸ் கடத்திட்டு போய்ட்டா அங்க என்ன நடக்கும்” என்பது தான் தளபதி 68 படத்தின் லீட் என கூறியுள்ளார். இதன் மூலம் GOAT படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியன்ஸ் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக GOAT படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. எனினும் அது உண்மையில்லை என்று வெங்கட்பிரபு கூறியிருந்தார். கதையில் வித்தியாசத்தை நுழைத்து ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் வெங்கட் பிரபுவும், ஆக்ஷன்களில் அசத்தும் விஜய்யும் இணைந்து உருவாகும் GOAT படம் தமிழ் திரையுலகில் புது அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. GOAT படத்தில் இரட்டை கேரக்டர்களில் நடிக்கும் விஜய்க்கு சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடிக்கின்றனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement