மேலும் அறிய

Vijay - Ilayaraja: அட.. 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - இளையராஜா காம்போ.. மாஸ் காண்பிப்பாரா யுவன்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'GOAT' படத்தில் விஜய் மற்றும் இளையராஜா இணைந்து பாட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது

கோட் (G.O.A.T)

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் படம் உருவாகி வருகிறது. இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க சினேகா, பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, பிரேம்ஜி, வைபவ், மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. 

விமர்சனங்களைப் பெறும் போஸ்டர்கள்

தாய்லாந்து , சென்னை, ஹைதராபாத் என இந்தப் படத்தில் படப்பிடிப்பு  நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இந்தப் போஸ்டர் ஹாலிவுட்டின் வில் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் படத்தின் போஸ்டர் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த விமர்சனங்களை மிக கூலாக எதிர்கொண்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

விஜய் இளையராஜா

தற்போது கோட் படத்தின் புதிய தகவல் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் மற்றும் இளையராஜா இணைந்து பாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்தப் படங்களில் விஜய்க்கு பாடல்கள் பாடியுமுள்ளார் இளையராஜா.

இதனைத் தொடர்ந்து தற்போது சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தில் இளையராஜா பாட இருக்கிறார். அதேபோல் இளையராஜா இசையில் விஜய் பாடிய என்னை தாலாட்ட வருவாளா மற்றும் ஃப்ரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற ருக்கு ஜா உள்ளிட்ட பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த முறை இளையராஜா மற்றும் விஜய்யின் குரலை ஒரே பாடலில் கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தப் பாடலை கங்கை அமரன் எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இளையராஜா - வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தில் இளையராஜா இசையமைத்த காட்டுமல்லி, உன்னோட நடந்தா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்து ஹிட்லிஸ்ட்டில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna :  ‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா புது உருட்டு..!
‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா உருட்டு..!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 23-ம் தேதி(நாளை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னையில ஜூலை 23-ம் தேதி(நாளை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
Group 4 Answer Key: சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி! 10 நாளுக்குள் குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?
Group 4 Answer Key: சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி! 10 நாளுக்குள் குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna :  ‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா புது உருட்டு..!
‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா உருட்டு..!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 23-ம் தேதி(நாளை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னையில ஜூலை 23-ம் தேதி(நாளை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
Group 4 Answer Key: சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி! 10 நாளுக்குள் குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?
Group 4 Answer Key: சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி! 10 நாளுக்குள் குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?
Wife Kills Husband: பாபநாசம் கான்செப்ட் - டைல்ஸ்க்கு அடியில் கணவன் Body, காதலனுடன் ஓடிய Lady
Wife Kills Husband: பாபநாசம் கான்செப்ட் - டைல்ஸ்க்கு அடியில் கணவன் Body, காதலனுடன் ஓடிய Lady
TNPSC Group 4: சேலத்தில் குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிப்பா? டிஎன்பிஎஸ்சி பரபரப்பு விளக்கம்
TNPSC Group 4: சேலத்தில் குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிப்பா? டிஎன்பிஎஸ்சி பரபரப்பு விளக்கம்
Minister Sivasankar: தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயருகிறதா.? அமைச்சர் என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்கோங்க
தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயருகிறதா.? அமைச்சர் என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்கோங்க
VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?
VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?
Embed widget