Asvins: படத்த தனியா தியேட்டர்ல பாக்க முடியாது... 'அஸ்வின்ஸ்' திரைப்படம் பற்றி திகிலூட்டும் நடிகர் வசந்த் ரவி!
ஹாரர் திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி திகிலூட்டி லைக்ஸ் அள்ளியது.
அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. வசந்த் ரவி , முரளிதரன், உதய தீப், சரஸ் மேனன், சிம்ரன் பரீக் ஆகியவரக்ள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஹாரர் திரைப்படமாக உருவாகியிருக்கும் அஸ்வின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய படத்தின் கதாநாயகன் வசந்த் ரவி, அஸ்வின்ஸ் திரைப்படத்தை திரையரங்குகளில் தனியாக அமர்ந்து பார்க்க முடியாது என்று படம் பற்றி பேசியுள்ளார்.
வசந்த் ரவி
படம் குறித்து பேசிய வசந்த “ தரமணி மற்றும் ராக்கி படங்களில் நடித்தப் பின் அடுத்ததாக எந்த மாதிரியான கதையைத் தேர்வுசெய்யலாம் என்று நான் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான், தருண் தேஜ் மூலமாக அஸ்வின்ஸ் கதை என்னை வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படம் . ஹாரர் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் இருந்த என்னை, அஸ்வின்ஸ் படத்தின் கதை மிகவும் கவர்ந்தது. என்னுடைய முந்தைய படங்களான தரமணி, ராக்கி ஆகிய படங்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தது போல், இந்தப் படத்தையும் ஆதரிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களிடமும் இந்தப் படம் போய் சேர்ந்தால் நான் சந்தோஷப்படுவேன்.” எனக் கூறினார் வசந்த்.
படத்தின் மெசேஜ் என்ன?
“இந்தப் படத்தை நான் முக்கியமானதாகக் கருதுவதற்கு காரணம் இந்தப் படத்தில் இருக்கும் மெசேஜ் தான். இந்தப் படத்திற்கு யூ / ஏ சான்றிதல் கிடைக்கும் என நான் எதிர்பார்த்தேன், ஆனால் ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இன்றைய தலைமுறையினர் இன்ஸ்டாகிராமில் பரவும் நெகட்டிவிட்டியால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவாதிக்க முயற்சிக்கிறது இந்தப் படம். அதே நேரத்தில் தெலுங்கில் இருந்து தமிழில் தயாரிபாளராக அறிமுகமாகும் பாபிக்கு இது முக்கியமான திரைப்படமாக அமையும்” எனப் பேசியுள்ளார்.
உங்களின் படம்
மேலும், “இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் முரளி , சரஸ்வதி, விமலா ராமல் ஆகியோர் இந்தப் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் முக்கியமான ஹீரோ படத்தின் இசையமைப்பாளர் விஜய் தான்.
தற்போது இருக்கும் சூழலில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேல் நான் மிகவும் பிரம்மிக்கும் ஒருவர் என்றால் சக்திவேலன் சார் அவர்கள். அவரது பேனரில் ஒரு படம் வெளியாகினால் அது நிச்சயம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அஸ்வின்ஸை என்னுடைய படமாக மட்டும் நான் பார்க்கவில்லை . இது உங்களுடையப் படம்” எனப் பேசியுள்ளார்.