மேலும் அறிய

Trisha about Nayantara: எனக்கு போட்டி நயன்தாராவா? முதல்முறையாக மனம் திறந்த திரிஷா... ரசிகர்களிடம் வேண்டுகோள்   

காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் சமந்தா ரோலில் முதலில் தேர்வானது நான்தான். ஆனால் அந்த வாய்ப்பை தவிர்த்ததற்கு முக்கியமான காரணம் உள்ளது

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகால பயணத்தை இன்றும் சிறப்பாக தொடர்ந்து கொண்டு இருக்கும் நடிகை திரிஷா. அன்று போல் இன்றும் அதே அழகுடன் சற்றும் வித்தியாசமின்றி சவுத் குயின் என செல்லமாக அழைக்கப்படும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை. 20 ஆண்டுகளாக ஹீரோயினாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இந்த நடிகைக்கு தானே, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என சமீபத்தில் சில வாக்குவாதங்கள் ஊடகங்களில் பரிமாறப்பட்டன. 

 

Trisha about Nayantara: எனக்கு போட்டி நயன்தாராவா? முதல்முறையாக மனம் திறந்த திரிஷா... ரசிகர்களிடம் வேண்டுகோள்   


எனக்கு பதில் தான் சமந்தா :
 
இந்த வாக்குவாதங்களுக்கு முதல் முறையாக மனம் திறந்து பதிலளித்துள்ளார் நடிகை திரிஷா. அவர் கூறுகையில் "விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளியான 'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தில் முதலில் சமந்தா ரோலில் நடிக்க முதலில் நான் தான் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் நான் தான் அந்த வாய்ப்பை மறுத்தேன். ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டதற்காக நான் என்றுமே வருத்தப்பட்டது இல்லை. அந்த முடிவை நான் தெளிவான மனதுடன் தான் எடுத்தேன். அதற்கான தகுந்த காரணம் ஒன்றும் என்னிடம் இருந்தது " என்றார். 

 

 

ரசிகர்களிடம் திரிஷா ரெக்வஸ்ட்:


மேலும் அவர் கூறுகையில் "நடிகை நயன்தாரா உடன் என்னை ஒப்பிட்டு சோசியல் மீடியாவில் பேசுவதை நான் வரவேற்கிறேன். நங்கள் இருவரும் ஒரே நேரத்தில் தான் எங்களின் திரை பயணத்தை தொடங்கினோம். ஒரே செட் நடிகர்களுடன் இருவருமே நடித்துள்ளோம். அது தான் எங்கள் இருவரையும் ஒப்பிடுவதற்கான முக்கியமான காரணமாக நான் கருதுகிறேன்.

எங்கள் இருவரின் ரசிகர்களின் சண்டையை நான் பாஸிட்டிவ் நோட்டில் தான் பார்க்கிறேன். நான் அதிகமாக நயன்தாராவுடன் தொடர்பில்லை. ஆனால் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னவென்றால் சில ரசிகர்கள் அவரவர்களின் ஃபேவரட் நடிகையை புகழ்வதற்காக எதிரில் இருப்பவரை இகழ்வாக பேசவேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை. அவர் இருவருக்கும் இருக்கும் தனித்தனி சிறப்பை எடுத்துக்கொள்ளுமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.    

 

 

ராங்கி திரிஷா :

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக ரசிகர்களை கிறங்கடித்த திரிஷா அடுத்தாக எம். சரவணன் இயக்கத்தில் 'ராங்கி' என்ற ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவுகள் சில இடங்களில் நடைபெற்று வருகின்றன.  

தலைப்பு செய்திகள்

சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
Vaiyapuri: மீம்ஸால் பறிபோன லோகேஷ் பட வாய்ப்பு.. விஜய் படத்தால் நடந்த சம்பவம்.. வையாபுரி வருத்தம்!
Vaiyapuri: மீம்ஸால் பறிபோன லோகேஷ் பட வாய்ப்பு.. விஜய் படத்தால் நடந்த சம்பவம்.. வையாபுரி வருத்தம்!
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
Consecutive holidays : 3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
PROPERTY TAX TAMILNADU : சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
Rasi Palan Today (26.09.2026): பௌர்ணமியுடன் புரட்டாசி சனிக்கிழமை.. இன்று யாருக்கு ஆபத்து.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (26.09.2026): பௌர்ணமியுடன் புரட்டாசி சனிக்கிழமை.. இன்று யாருக்கு ஆபத்து.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இன்று டார்கெட்.! இடி, மின்னலுடன் மழை- வானிலை மையம் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இன்று டார்கெட்.! இடி, மின்னலுடன் மழை- வானிலை மையம் அலர்ட்
Ration Card : ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
Embed widget